search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே 30-ந் தேதி நடக்கிறது படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
    X

    பண்ருட்டி அருகே 30-ந் தேதி நடக்கிறது படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

    • பண்ருட்டி அருகே படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 30-ந் தேதி நடக்கவிருக்கிறது.
    • 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பண்ருட்டிஅருகே கொள்ளு க்கார ன்குட்டையில் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30 ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு இருபதாயி ரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இம்முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 8-ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புடன் முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04142-290039),9499055908 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறவுள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 30 ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் பங்குப்பெற்று இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×