புவனகிரி அருகே மனைவியை மிரட்ட தூக்கிட்டு வீடியோ பதிவிட்டவர் சாவு

புவனகிரி அருகே மனைவியை மிரட்ட தூக்கிட்டு வீடியோ பதிவிட்டவர் மருத்துவமனையில் இறந்தார்.ரமேஷ் என்பவரின் மகள் சுவேதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
புவனகிரி அருகே  மனைவியை மிரட்ட தூக்கிட்டு வீடியோ பதிவிட்டவர் சாவு
Published on

கடலுார்: 

கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணியரசன்,(வயது25. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சுவேதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் புவனகிரியில் வாடகை வீட்டில் வசித்தனர். அவர்களுக்கு2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மணியரசன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதை சுவேதா கண்டித்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு மணியரசன் குடித்துவிட்டு வந்ததால் சுவேதா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். குடி போதையில் இருந்த மணியரசன், தன் மனைவியை மிரட்ட துாக்குப் போட்டுக் கொண்டு, தற்கொலை செய்து கொள்வதாகவீடியோவை 'வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மணியரசன் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com