என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.114 கோடி நகைக்கடன் தள்ளுபடி: கலெக்டர் தகவல்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழுள்ள நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன் படிகடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட 181 கூட்டுறவு நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதலின்படி துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய முறையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் 29,172 பயனாளிகளுக்கு ரூ.114.25 கோடி மதிப்பீட்டிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.
    • 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக ரூ.8 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் காலத்தின் உயரம் அதிகமாக வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அரசு பிறகு சுமார் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் உயரம் மீண்டும் குறைந்த அளவே கட்டப்படுவதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் நடைபெற்று வந்த வேலையை நிறுத்தி சுமார் 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் சமூக ஆர்வலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பாலம் கட்டும் உரிமையாளரிடம் பேசி 15 அடி உயரத்திற்கு பாலத்தை கட்ட ஏற்பாடு செய்வதாக கூறி சமூக தீர்வை ஏற்படுத்தி பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.

    • கடலூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டுள்ளார்.
    • சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரில், சமிட்டிக்குப்பம் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது மகளை பெண் கேட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியில் சென்ற எனது மகளை சுரேஷ் கடத்தி சென்று இருக்கலாம் என புகார் அளித்ததன் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

    • கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • காயமடைந்த ஹரி மணிபாலன் மற்றும் இளைய பெருமாள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே அப்பியம் பேட்டை சேர்ந்தவர் சிவபிரகாசம். அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலத்தில் சிவபிரகாசத்திற்கும் , அதே பகுதியை சேர்ந்த அறிவழகனுக்கும் திடீரென்று வாய் தகறாறு ஏற்பட்டது. தகவல் அறிந்த சிவப்பிரகாசத்தின் தந்தை உத்திராபதி அறிவழகனிடம் தட்டி கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் திடீரென்று உத்திரபதியை திட்டினார்கள். அப்போது உத்திராபதியின் மற்றொரு மகன் ஹரி மணிபாலன் இது சம்பந்தமாக தட்டி கேட்டபோது, இரும்பு பைபால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த தகராறு இரு தரப்பினருக்கும் மோதலாக மாறியது. இதில் காயமடைந்த ஹரி மணிபாலன் மற்றும் இளைய பெருமாள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் இளையபெருமாள், அறிவழகன், தமிழரசன், தமிழ்ச்செல்வன், ரவிச்சந்திரன், கணேசமூர்த்தி மற்றும் செல்வக்குமார், உத்திராபதி, ராஜ்குமார், சிவப்பிரகாசம், ஹரி மணிபாலன், ராம்கி ஆகிய 12 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியானார்.
    • இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் போலீஸ் சரகம் அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. மீனவர். அவரது மகன் விவன் (வயது 5).இவர் இன்று காலை திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவன் விவனை தேடினர். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இன்று காலை 9.30 மணி அளவில் பேட்ேடாடை பகுதியில் உள்ள கடற்கரையில் சிறுவன் விவன் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இதுகுறித்து வேலு புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த சிறுவன் கடற்கரையில் விளையாடிய போது ராட்சத அலையில் சிக்கி இறந்து இருப்பது தெரியவந்தது.

    • 2-வது மனைவிக்கு குழந்தை இல்லாததால் கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 37). கொத்தனார். இவருக்கு கன்னிகா என்ற பெண்ணுடன் திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தியாகராஜன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தியாகராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்தார் . இதில் மயக்கம் அடைந்த தியாகராஜனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிர் இழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையின ராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றம் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான மாணவ-மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற் படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இந்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவி கள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பி க்கும் வகையில் அனைத்து கல்வி நிலைங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ-மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளி யிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
    • அதிகாலை கண்விழித்து பார்க்கையில் தனது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பொன்னேரியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி வைத்து விட்டு உறங்க சென்றார். அதிகாலை கண்விழித்து பார்க்கையில் தனது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம ஆசாமி யை தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் கொளஞ்சிகுப்பம் மாரியம்ம ன்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யானந்தன். இவரது மனைவி ராதா (வயது 37). இவர், காடாம்புலியூர் தோப்பில் நேற்று மாலை ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர் ராதாவை மிரட்டி இவர்அணிந்து இருந்த தாலிசெயின் மற்றும் செல்போனை பறித்து சென்றார். இது குறித்து காடாம்பு லியூர் போலீஸ் நிலையத்தி ல் ராதா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காடாம்பு லியூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சந்திரன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் அருகே கஞ்சா மூட்டைகள் கடலில் மிதந்து வந்தது.
    • கடலில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர், ஜூலை.29-

    கடலூர் துறைமுகம் அருகே தம்மனாம் பேட்டை கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் 2 மூட்டைகள் மிதந்து கரை ஒதுங்கியது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கடலூர் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மர்மமான முறையில் மிதந்து வந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர். அப்போது 2 மூட்டையிலும் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 மூட்டைகளிலும் சுமார் 50 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகள் இலங்கை பகுதியில் இருந்து வந்ததா? அல்லது தமிழகத்தில் கஞ்சா ஊடுருவலை போலீசார் கடுமையாக நெருக்கடி கொடுத்து தடுத்து வருவதால் கஞ்சா வியாபாரிகள் கடலில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலில் கஞ்சா மூட்டைகள் மிதந்து வந்ததால் கடலோர காவல் படை போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போதிய தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா மூட்டைகளை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • பண்ருட்டி போலீசார் என்.எல்.சி. தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை கைது செய்தனர்.
    • நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவணை முறையில் 7,50,000- கொடுத்துள்ளார் செல்வழகன்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் உட்கோட்டம் முத்தாண்டிக் குப்பம் காவல் எல்லைக் குட்பட்ட சின்ன ஒடப்பன் குப்பத்தை சேர்ந்தவர் செல்வழகன் (வயது 30) என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர், அதேபகுதியை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் தனசேகரன் (33). என்பவரி டம் தனது குடும்ப செலவுக் காக ரூ 3,00,000 கடனாக பெற்றிருந்தார். இந்ததொகையை பெறுவதற்காக பூர்த்தி செய்யப் படாத 10ஆவணங்களை கொடுத்திருந்ததார். இந்தகடன் தொகைக்கு நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவனை முறையில் 7,50,000 கொடுத்துள்ளார் செல்வழகன். தனசேகரன் தன்னிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டு–வதாக முத்தாண்டிக் குப்பம் போலீசில் செல்வழ கன்புகார் கொடுத்தார். கடலூர் எஸ்.பி. பண்ருட்டி டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ராமலிங்கம் என்பவரிடமும் தனசேகரன் கந்து வட்டி கேட்டு மிரட்டி யுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனசேகரனை கைது செய்து அவரிடமிருந்து செல்வழகன் கொடுத்த ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் தனசேகரனை பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடலூர் மாவட்டத்தில் உளுந்து விவசாயிகளிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
    • கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர் ஜூலை.28-

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் கீழ்கொள்ளிடம் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரில் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற பெயரில் காட்டுமன்னார்கோயில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு வணிகம் செய்யும் பொருட்கள் வாங்க அரசு மானியம் 20 லட்சம் மார்ச் மாதம் 2022 ல் பெறப்பட்டதாகவும் , அதன்பேரில் சுற்றியுள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் உளுந்து 10 ஆயிரத்து 350 கிலோ வாங்கியதாகவும் , அதனை வியாபாரிகளிடம் விற்பனை செய்ய முடிவு செய்து மணிவண்ணன் என்பவர் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஸ்பைஸ் பிளாசா என்ற பெயரில் குடோன் வைத்து வியாபாரம் செய்து வந்த நிலாபர் வயது 38 என்பவரிடம் கடந்த மே மாதம் கிலோ ரூ . 70 க்கு விலை பேசி மொத்தம் 7,24,500 ரூபாய்க்கு அனுப்பி வைத்தோம். ஆனால் உளுந்தை வாங்கிகொண்ட மேற்படி நிலாபர் அதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார் என புகார் மனு அளித்தார். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது .

    மேலும் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் கோயம்புத்தூர் , மரக்கடை பகுதியில் உள்ள நிலாபரை கைது செய்து பாதுகாப்பாக கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிலாபர் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும் , அதில் தனக்கு போதுமான வருமானம் கிடைக்காததால் விவசாய பொருட்கள் கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தில் விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்து , ஒரு நிறுவனம் ஆரம்பித்து விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை ஆன்லைனில் தனியார் ஆப் மற்றும் இன்னும் இதர ஆப் மூலம் கண்டறிந்து அதில் குறிப்பிட்டுள்ள விவசாய பொருட்களை குறைவான விலைக்கு பேசி அவர்களிடம் கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தில் விற்பனை செய்து தொழில் செய்து வந்ததாகவும் , தனியார் ஆப் மூலம் சேலம் மணிவண்ணன் என்பவர் கருப்பு உளுந்து விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்திருந்ததை பார்த்து அவரிடம் 10350 கிலோ உளுந்தை வாங்கிகொண்டு அதை மொத்தமாக வேறு ஒருவரிடம் விற்றுவிட்டு அதன் மூலம் பெற்ற பணத்தை தான் சுற்றுலா தளங்களுக்கு சென்று பணத்தை செலவழித்து விட்டதாவும் , தற்போது பணம் ஏதும் இல்லை என கூறினார்.  தனியார் ஆப் மூலம் காட்டுமன்னார்கோவில் வீராணம் டெல்டா உற்பத்தி நிறுவனத்துடன் ரூபாய் 7,24,500 மதிப்பை உளுந்தை பெற்று கொண்டு நுாதன முறையில் மோசடி செய்த நிலாபர் (வயது 38) கைது செய்தனர்.

    ×