search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gram farmer"

    • கடலூர் மாவட்டத்தில் உளுந்து விவசாயிகளிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
    • கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர் ஜூலை.28-

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் கீழ்கொள்ளிடம் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரில் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற பெயரில் காட்டுமன்னார்கோயில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆயிரம் விவசாயிகளைக் கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு வணிகம் செய்யும் பொருட்கள் வாங்க அரசு மானியம் 20 லட்சம் மார்ச் மாதம் 2022 ல் பெறப்பட்டதாகவும் , அதன்பேரில் சுற்றியுள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் உளுந்து 10 ஆயிரத்து 350 கிலோ வாங்கியதாகவும் , அதனை வியாபாரிகளிடம் விற்பனை செய்ய முடிவு செய்து மணிவண்ணன் என்பவர் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஸ்பைஸ் பிளாசா என்ற பெயரில் குடோன் வைத்து வியாபாரம் செய்து வந்த நிலாபர் வயது 38 என்பவரிடம் கடந்த மே மாதம் கிலோ ரூ . 70 க்கு விலை பேசி மொத்தம் 7,24,500 ரூபாய்க்கு அனுப்பி வைத்தோம். ஆனால் உளுந்தை வாங்கிகொண்ட மேற்படி நிலாபர் அதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார் என புகார் மனு அளித்தார். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது .

    மேலும் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் கோயம்புத்தூர் , மரக்கடை பகுதியில் உள்ள நிலாபரை கைது செய்து பாதுகாப்பாக கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிலாபர் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும் , அதில் தனக்கு போதுமான வருமானம் கிடைக்காததால் விவசாய பொருட்கள் கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தில் விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்து , ஒரு நிறுவனம் ஆரம்பித்து விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை ஆன்லைனில் தனியார் ஆப் மற்றும் இன்னும் இதர ஆப் மூலம் கண்டறிந்து அதில் குறிப்பிட்டுள்ள விவசாய பொருட்களை குறைவான விலைக்கு பேசி அவர்களிடம் கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தில் விற்பனை செய்து தொழில் செய்து வந்ததாகவும் , தனியார் ஆப் மூலம் சேலம் மணிவண்ணன் என்பவர் கருப்பு உளுந்து விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்திருந்ததை பார்த்து அவரிடம் 10350 கிலோ உளுந்தை வாங்கிகொண்டு அதை மொத்தமாக வேறு ஒருவரிடம் விற்றுவிட்டு அதன் மூலம் பெற்ற பணத்தை தான் சுற்றுலா தளங்களுக்கு சென்று பணத்தை செலவழித்து விட்டதாவும் , தற்போது பணம் ஏதும் இல்லை என கூறினார்.  தனியார் ஆப் மூலம் காட்டுமன்னார்கோவில் வீராணம் டெல்டா உற்பத்தி நிறுவனத்துடன் ரூபாய் 7,24,500 மதிப்பை உளுந்தை பெற்று கொண்டு நுாதன முறையில் மோசடி செய்த நிலாபர் (வயது 38) கைது செய்தனர்.

    ×