search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery loan discount"

    • 15 பேர் இன்று காலை கலெக்டர் கார்மேகத்திடம் மனு
    • வங்கியில் 5 பவுன் குறைவாக நகை அடகு வைப்பு

    சேலம்:

    சேலம் சித்தர் கோவில் சத்யா நகர் அருகில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 15 பேர் இன்று காலை கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் இந்த முகாமில் வசித்து வருகிறோம். மொத்தம் 35 குடும்பங்கள் உள்ளன. கரிச்சிப்பட்டி கூட்டுறவு வங்கியில் 5 பவுன் குறைவாக நகை அடகு வைத்துள்ளோம். தமிழக அரசு 5 பவுனுக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் எங்களை போன்றவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்து எங்கள் நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • கலெக்டர் தகவல்
    • 23 ஆயிரத்து 578 பேர் பயனடைந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12 வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் 2037 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டிலும், 4 நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் 4974 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 11 ஆயிரத்து 463 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டிலும், 9 நகர கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 4201 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டிலும், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும்,

    3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சார்பில் 848 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 578 பயனாளிகளுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.76 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.114 கோடி நகைக்கடன் தள்ளுபடி: கலெக்டர் தகவல்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழுள்ள நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன் படிகடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட 181 கூட்டுறவு நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதலின்படி துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய முறையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் 29,172 பயனாளிகளுக்கு ரூ.114.25 கோடி மதிப்பீட்டிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    ×