search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை: கலெக்டர் தகவல்
    X

    கடலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை: கலெக்டர் தகவல்

    • கடலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையின ராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றம் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான மாணவ-மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற் படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இந்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவி கள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பி க்கும் வகையில் அனைத்து கல்வி நிலைங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ-மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளி யிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×