என் மலர்tooltip icon

    கடலூர்

    • தாயிடமிருந்து நகை, பணத்தை பறித்து கவனிக்காத மகனை போலீசார் எச்சரித்தனர்.
    • இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 75) .இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது 2 பவுன் நகை மற்றும் தனது கணவரது சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை தனது மூத்த மகன் அன்புவேல் வாங்கிக்கொண்டு தன்னை கவனித்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாக புகார் தெரிவித்தார். அதன் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் புகார்தாரரின் மகன் அன்புவேல் தனது அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய 2 பவுன் நகை , 1 லட்சம் பணம் மற்றும் வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது உறவினர்களை சாட்சியாக வைத்து அவர்கள் முன்னிலையில் கொடுத்து விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

    • விருத்தாசலம் அருேக முதியவர் ஒருவர் லாரி மோதி பலியானார்.
    • வீட்டிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்து போகும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்(வயது 55). இவர் நேற்று இரவு 7:45 மணி அளவில் அவரது வீட்டிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்து போகும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே பாலத்தில் இரவில் மின் விளக்குகள் எரியாததால் ெகாள்ளையர்கள் வழிப்பறி நடத்தி வருகின்றனர்.
    • அதிகாரிகள் இதில் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் தமிழகத்தில் தொழிலுக்கு உகந்த மாவட்டத்தில் முதன்மை மாவட்டமாகும். இங்கு பல்வேறு தொழிலுக்கு முன்னோடியாக தொழிற்சாலைகள் உள்ளது.குறிப்பாக கடலூர் துறைமுகம் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கக்கூடிய சிப்காட் வளாகம் உள்ளது. இங்குள்ள கடலூர் துறைமுகம் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறுபட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் கடலூருக்கு சிறப்புதரக்கூடிய கடலூர் சில்வர் பீச் இங்கு உள்ளது.இதுதவிர் முதன்மை கோவில்களின் வரிசையில் உள்ள பாடலீஸ்வரர் கோவில் இங்கு உள்ளது. மேலும் தேவநாத சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களும், ஏராளமான சூப்பர் மார்க்கெட் எண்ணில் அடங்காத கடைகள் உள்ளிட்டவைகள் கடலூரில் உள்ளது.

    இப்படி ஒருபுறம் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டம் மற்றொருபுறம் குறைகளையும் கொண்டுள்ளது. அந்தக் குறைகள் என்னவென்றால் கடலூர் மாவட்டம் முழுவதும் பஞ்சரான சாலைகளால் போக்குவரத்துக்கு பாதிப்பு, ஆங்காங்கே குவியும் குப்பைகளால் சுகாதாரக் சீர்கேடு, காட்சிப் பொருளாக இருக்கும் மணிக்கூண்டுகள், தாறுமாறாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் உள்ளிட்ட பல்வேறு குறைகளையும் கொண்டுள்ளது.கடலூர்-புதுவை மாநிலத்தை இணைக்கும் பகுதியாக உண்ணாமலை செட்டி சாவடியில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை இதனால் அந்த பாலத்தில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் பாதிப்படைகின்றனர்

    குறிப்பாக மின்விளக்கு எரியாத பாலத்தில் நடந்து வரும் போது மர்ம நபர்கள் நடந்து செல்வோரை தாக்கி பணம் நகைகளை திருடிச் செல்லும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த பாலங்களில் முதன்மையானது கடலூர் மாவட்டத்தையும் புதுவை மாநிலத்தையும் இணைக்கும் போக்குவரத்திற்கு உகந்ததாக இருக்கக்கூடியது.இரவு நேரத்தில் விளக்குகள் எரியாமல் இந்த பாலம் இருள் சூழ்ந்து கொள்ளையர்களின் புகழிடமாக உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர். 

    • சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடைபெற்றது.
    • மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

     சிதம்பரம்:

    சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீ மாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. தேர், கீழசன்னதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதியை அடைந்தது. முன்னதாக நடராஜர் கோவிலிருந்து பொதுதீட்சிதர்கள் பிரசாதத்துடன் வந்து பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னர் தேர் புறப்பட்டது. பின்னர் மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

    இன்று காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவையும், காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்கும் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவமும், 3-ந் தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு பிரேமா வீராசாமி, கலியமூர்த்தி பிள்ளை ஆகியோர் செய்துள்ளனர். தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பேருந்துகள் பஸ்நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பஸ்கள்இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 250 -க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • கடலூரில் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினர்.
    • கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திரவுபதி அம்மன் சன்னதியும் அமையபெற்று உள்ளது.இன்று அதிகாலை விநாயகர் கோவிலில் இருந்து திடீரென்று அதிக ஒலியுடன் அலாரம் அடித்தது. இதனை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியில் வந்து பார்த்தபோது விநாயகர் கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் சன்னதி முன்பு இருந்த இரும்பு கேட் திறந்து இருந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இரும்பு கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடந்தது.கோவில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் இருந்த பூட்டு உடைந்து சிதறி கிடந்தன. அப்போது திடீரென்று அலாரம் அடித்த காரணத்தினால் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் யார்? என சி.சி.டி.வி காமிரா மூலம் போலீசார் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூரில் மையப் பகுதியாக உள்ள மஞ்சக் குப்பம் விநாயகர் கோவிலில் அதிகாலையில் பூட்டை உடைத்து உண்டியலில் மர்ம நபர்கள் திருட முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. மேலும் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • திட்டக்குடி அருகே பூச்சி கடித்து வாலிபர் பலியானர்.
    • வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதூர் அடுத்துள்ள மேல் ஐவனூரை சேர்ந்த அருள் வேந்தன் மகன் அருள்தாஸ் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது விஷ பூச்சி கடித்து விட்டது.  வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அருள்தாஸ் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • பண்ருட்டியில் தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அங்கிருந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர்தில்லைகோவிந்தன்(வயது69).தி.மு.க. பிரமுகர் திருமணம் ஆகாதவர். இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். சமீபத்தில் களத்து மேட்டுப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வீடுகள் இடிக்கப்பட்டதால்அங்கிருந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.இவருக்கு என்று குடும்பம் இல்லாததாலும் அங்கும் யாரும் இல்லாததாலும் விரக்தியில் இருந்து வந்த இவர் நேற்று இரவு விஷம் குடித்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் சப் -இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே மர வேலை தொழிலாளி அடித்துக்கொலை? போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
    • கார்த்திகேயன் அணிந்திருந்த கைலி மற்றும் உடலில் லேசான காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வாண்டராசன் குப்பம் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). மரவேலை செய்து வந்தார். இவர் இன்று காலை நடுவீரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உடலில் லேசான காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து நடுவீரப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நிலையில் இருந்த கார்த்திகேயன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் எப்படி இறந்தார்? இவருடன் யாராவது இருந்தார்களா? என்பதை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உறவினர்கள், கார்த்திகேயன் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் கார்த்திகேயன் அணிந்திருந்த கைலி மற்றும் உடலில் லேசான காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டி அருகேபெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காடாம்பு லியூர்கொஞ்சிகுப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யானந்தன் இவரது மனைவி ராதா (37). இவர், காடாம்புலியூர் மாயா கார்டன் ரவி என்பவரின்தோப்பில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர்இவரை மிரட்டி இவர் அணிந்து இருந்த செயின்மற்றும் செல்போ னை பறித்துசென்றா ர்.

    இதுகுறித்து காடாம்பு லியூர் போலீசா ர்வழக்குபதிவுசெய்து விசா ரணை நடத்திவந்தனர். கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் உத்தரவின் பேரின் பண்ருட்டி துணைபோலீ ஸ்சூப்பிரண்ட் சபியுல்லா மேற்பார்வையில் காடாம்பு லியூர் இன்ஸ்பெக்ட ர்ராஜதாமரை பாண்டியன்,சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீசார் ரகு மர்மஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.

    நேற்று சாத்திப்பட்டு பஸ்நிறுத்தம் அருகில் போலீசா ர்வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையி ல்காடாம்புலியூர் அடுத்த தெற்குமேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( 27 ) என தெரிய வந்தது. இவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறித்தை ஒப்பு க்கொண்டார்

    இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடமிருந்து நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

    பண்ருட்டி அருகே கார் மெக்கானிக் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டை சேர்ந்தவர் சுரேஷ் (22), கார் மெக்கானிக். இவர் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் அவரை கடத்தி சென்றார்.

    இதுகுறித்து மாணவியின் தாயார் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னை யில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சென்னை சென்று மாணவியை மீட்டனர். இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.மகளிர் ேபாலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    • கொள்ளுக்காரன்குட்டையில் தனியார்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பணி ஆணை வழங்க உள்ளனர்.

    கடலூர்:

    நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சி, கொள்ளுக்காரன்கு ட்டைவள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டவேலை வாய்ப்புதுறை, மாவட்ட நிர்வாகம் மாவட்டவேலை வாய்ப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையிலும்,சபா.ராஜேந்திரன்மு ன்னிலையிலும் நடந்தது. இதில்க்கு2000-க்கும்மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்க லந்துகொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர் . இதில்பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்று டன்ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நேரில் கலந்து கொண்டனர். பிற்பகல் நடைபெறவுள்ள பணி ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் கணேசன், சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுபணி ஆணை வழங்க உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருகைதரும் அனைவருக்கும் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏஉணவு ஏற்பாடுகள் செய்து உள்ளார்.

    • திட்டக்குடி அருகே மின் கட்டணத்தை கையாடல் செய்த கணக்கீட்டாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • கணக்கீட்டாளர் விஜயன், 30-க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வசூலித்து, அதை முறையாக வரவு வைக்கவில்லை எனத்தெரிந்தது.

    கடலுார்:

    கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே வாகையூர் கிராம மக்கள் சிலர் கடந்த சில நாட்களாக ராமநத்தம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தினர். அப்போது அங்கிருந்த கணக்கீட்டாளர் விஜயன், கணினி பழுது எனக்கூறி, கையால் எழுதிய ரசீதை கொடுத்தார். நேற்று வாகையூர் கிராமத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் பணம் செலுத்திய நபர்களின் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க முயன்றனர். அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் தாங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதை ஊழியர்களிடம் காண்பித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தொழுதூர் உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கணக்கீட்டாளர் விஜயன், 30-க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வசூலித்து, அதை முறையாக வரவு வைக்கவில்லை எனத்தெ ரிந்தது. இதையடுத்து, கணக்கீ ட்டாளர் விஜயனை உதவி செயற்பொறி யாளர் தர்மலிங்கம் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தர விட்டார்.

    ×