என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பரிதாபம்: தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது
- பண்ருட்டியில் தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- அங்கிருந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர்தில்லைகோவிந்தன்(வயது69).தி.மு.க. பிரமுகர் திருமணம் ஆகாதவர். இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். சமீபத்தில் களத்து மேட்டுப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வீடுகள் இடிக்கப்பட்டதால்அங்கிருந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.இவருக்கு என்று குடும்பம் இல்லாததாலும் அங்கும் யாரும் இல்லாததாலும் விரக்தியில் இருந்து வந்த இவர் நேற்று இரவு விஷம் குடித்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் சப் -இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.