என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே மின் கட்டணத்தை கையாடல் செய்த கணக்கீட்டாளர்  சஸ்பெண்டு
    X

    திட்டக்குடி அருகே மின் கட்டணத்தை கையாடல் செய்த கணக்கீட்டாளர் சஸ்பெண்டு

    • திட்டக்குடி அருகே மின் கட்டணத்தை கையாடல் செய்த கணக்கீட்டாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • கணக்கீட்டாளர் விஜயன், 30-க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வசூலித்து, அதை முறையாக வரவு வைக்கவில்லை எனத்தெரிந்தது.

    கடலுார்:

    கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே வாகையூர் கிராம மக்கள் சிலர் கடந்த சில நாட்களாக ராமநத்தம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தினர். அப்போது அங்கிருந்த கணக்கீட்டாளர் விஜயன், கணினி பழுது எனக்கூறி, கையால் எழுதிய ரசீதை கொடுத்தார். நேற்று வாகையூர் கிராமத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் பணம் செலுத்திய நபர்களின் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க முயன்றனர். அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் தாங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதை ஊழியர்களிடம் காண்பித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தொழுதூர் உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கணக்கீட்டாளர் விஜயன், 30-க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வசூலித்து, அதை முறையாக வரவு வைக்கவில்லை எனத்தெ ரிந்தது. இதையடுத்து, கணக்கீ ட்டாளர் விஜயனை உதவி செயற்பொறி யாளர் தர்மலிங்கம் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தர விட்டார்.

    Next Story
    ×