என் மலர்
நீங்கள் தேடியது "A bridge in the dark"
- கடலூர் அருகே பாலத்தில் இரவில் மின் விளக்குகள் எரியாததால் ெகாள்ளையர்கள் வழிப்பறி நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் இதில் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் தமிழகத்தில் தொழிலுக்கு உகந்த மாவட்டத்தில் முதன்மை மாவட்டமாகும். இங்கு பல்வேறு தொழிலுக்கு முன்னோடியாக தொழிற்சாலைகள் உள்ளது.குறிப்பாக கடலூர் துறைமுகம் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கக்கூடிய சிப்காட் வளாகம் உள்ளது. இங்குள்ள கடலூர் துறைமுகம் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறுபட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் கடலூருக்கு சிறப்புதரக்கூடிய கடலூர் சில்வர் பீச் இங்கு உள்ளது.இதுதவிர் முதன்மை கோவில்களின் வரிசையில் உள்ள பாடலீஸ்வரர் கோவில் இங்கு உள்ளது. மேலும் தேவநாத சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களும், ஏராளமான சூப்பர் மார்க்கெட் எண்ணில் அடங்காத கடைகள் உள்ளிட்டவைகள் கடலூரில் உள்ளது.
இப்படி ஒருபுறம் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டம் மற்றொருபுறம் குறைகளையும் கொண்டுள்ளது. அந்தக் குறைகள் என்னவென்றால் கடலூர் மாவட்டம் முழுவதும் பஞ்சரான சாலைகளால் போக்குவரத்துக்கு பாதிப்பு, ஆங்காங்கே குவியும் குப்பைகளால் சுகாதாரக் சீர்கேடு, காட்சிப் பொருளாக இருக்கும் மணிக்கூண்டுகள், தாறுமாறாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் உள்ளிட்ட பல்வேறு குறைகளையும் கொண்டுள்ளது.கடலூர்-புதுவை மாநிலத்தை இணைக்கும் பகுதியாக உண்ணாமலை செட்டி சாவடியில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை இதனால் அந்த பாலத்தில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் பாதிப்படைகின்றனர்
குறிப்பாக மின்விளக்கு எரியாத பாலத்தில் நடந்து வரும் போது மர்ம நபர்கள் நடந்து செல்வோரை தாக்கி பணம் நகைகளை திருடிச் செல்லும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த பாலங்களில் முதன்மையானது கடலூர் மாவட்டத்தையும் புதுவை மாநிலத்தையும் இணைக்கும் போக்குவரத்திற்கு உகந்ததாக இருக்கக்கூடியது.இரவு நேரத்தில் விளக்குகள் எரியாமல் இந்த பாலம் இருள் சூழ்ந்து கொள்ளையர்களின் புகழிடமாக உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.






