என் மலர்
கடலூர்
- கடலூர் அருகே தாய், மகன் திடீர் மாயமானர்.
- அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 36). இவரது மனைவி சரளா (வயது 27). இவர்களது மகன் அஸ்வந்த் (வயது 4). சம்பவத்தன்று சரளா தனது மகன் அஸ்வந்துடன், தனது தாய் வீடான வில்லியநல்லூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து மனைவி மற்றும் மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.
- உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிதி உதவி அமைச்சர்கள், எம்.எல்.ஏ. ஆகியோர்களால் நேரில் சென்று வழங்கப்பட்டது.
- உயிரிழந்த விமலின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சியும் பெற்று வந்தார். இவரது ஊரில் 'முரட்டுக்காளை' என்ற பெயரில் கபடி அணி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அணியினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் கபடி போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதன்படி கடந்த 24-ம் தேதி இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முரட்டுக்காளை அணியும் கலந்து கொண்டது. அப்போது நடைபெற்ற விளையாட்டில் கலந்து கொண்ட விமல் எதிரணியை நோக்கி ரெய்டு சென்றார். அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் வேகமாக ஓடி வந்து விமல் மீது விழுந்தார். இந்த நிலையில் விமல் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே சரிந்து விழுந்து இறந்து போனார். விமலின் மறைவால் அந்த போட்டிக்கு வந்திருந்த விளையாட்டு வீரர்கள், போட்டி நடத்தியவர்கள், விமலின் சொந்த ஊர்க்காரர்கள் உட்பட அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். உயிரிழந்த விமலின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், விமலின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கபடி போட்டி யில் உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்தினரை அமைச்சர்கள் மெய்யநாதன், சி.வி.கணேசன், நெய்வேலி சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூபாய் 3 லட்சம் நிதியினையும், அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியாக ரூ.2 லட்சத்தையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் சிவா. கார்த்திகேயன், யூனியன் சேர்மன் சபா.பாலமுருகன், துணைத்தலைவர் தேவகி ஆண்டவரசு, தி.மு.க. வை தலைவர் ராஜா முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அறிவழகன் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- கல்லூரி மாணவன் மாயமானதால் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
- இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதியன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாக்கான்குடி அருகே உள்ள புளியங்குடி கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் இவரது மகன் ஆகாஷ் (18 ) , இவர் சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ.படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதியன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இவரது தந்தை சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- பண்ருட்டியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சொரத்தூரை சேர்ந்தவர் சுப்பிர மணியன் (51).இவர் என்எல்சி யில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முந்திரி தோப்பில் உள்ள முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது மகன் ஞானசேகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தாண்டி குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- பண்ருட்டி அருகே வாடகை சைக்கிள் நிறுத்தத்தில் புகுந்து 3 பேரை மர்ம கும்பல் தாக்கினர்.
- தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரகோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 55). இவர் அதே பகுதியில் வாடகை சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். நேற்று இரவு இந்த சைக்கிள் ஸ்டாண்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த கிருஷ்ணராஜ் அவரது மனைவி காந்திமதி, அவரது மகன் ஹரிகரன் ஆகியோரை பயங்கரமாக தாக்கி அங்கிருந்த மோட்டார் பைக் திருடி சென்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பி ரண்டு சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ் பெக்டர் ரங்கநாதன்மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்வி ரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்குமா? என்பது குறித்து விசாரித்தனர். கணவன், மனைவி, மகனை தாக்கி மோட்டார் பைக் திருடி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சிதம்பரம் நகர அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடலூர்:
சிதம்பரத்தை அடுத்த தில்லை விடங்கன் கெடச்சா வடிகாலமைப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனகாம்பாள் (வயது 19) . அதே பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை மகன் சுகன்ராஜ் இவர் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தனியார் நூல் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். சுகன்ராஜ் கனகாம்பாளை காதலிப்பதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கனகாம்பாள் சிதம்பரம் நகர அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுகன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செய்தனர்.
- விருத்தாசலம் அருகே வாலிபர் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
- வேல்முருகனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே புதுக்கூரப்பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கோவையில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது தமது ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்திருந்த வேல்முருக னுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வேல்முருகனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்பொழுது அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் வேல்முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மாவட்டத்தில் 13 பழங்குடி இன குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை கலெக்டர் வழங்கினார்.
- பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்,
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமை தாங்கினார். ட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பட்டா தொடர்பான 211 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 54 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 46 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 63 மனுக்களும், என்.எல்.சி. தொடர்பாக 44 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், இதர மனுக்கள் 41 ஆக மொத்தம் 497 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், சிறுபாக்கம் பகுதியில் சுமார் 20 வருட காலமாக வசிக்கும் பூம்பூம்மாடு வைத்து பிழைக்கும் இந்து-ஆதியன் வகுப்பினை சேர்ந்த 7 குடும்பங்கள் மற்றும் அதே கிராமத்தில் 35 வருடங்களுக்கு மேலாக கூரை வீடு மற்றும் அட்டை வீடுகள் கட்டி வசிக்கும் இந்து-காட்டுநாயக்கன் வகுப்பை சேர்ந்த 6 குடும்பங்கள் என மொத்தம் 13 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- காதலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரவிசங்கர் என்பவரை காதலித்து தற்போது விலகி இருந்தார்
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் புகார் மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பேரில் குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரவிசங்கர் என்பவரை காதலித்து தற்போது விலகி இருந்தார். ஆனால் ரவிசங்கர் தன்னுடன் 25 வயது பெண் சேர்ந்து எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவதாக புகார் அளித்தார். அதன் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரவிசங்கர் என்பவர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
- கடலூர் மாவட்டத்தில் விபத்தை குறைப்பதற்கு சாலை அளவீடு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- சாலை விபத்து குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கும் இடங்களை கண்டறிந்தும், வருங்காலங்களில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகள் எவை என ஆய்வு செய்வதற்கு காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து தற்போது தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி இவர்கள் சிவில் பேராசிரியர்கள் மற்றும் என்ஜினியரிங் மாணவர்களை கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விபத்து நடக்கும் சாலைகளை அளவிடு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் அந்த பகுதியில் போதுமான வெளிச்சம் உள்ளதா? இரும்பு தடுப்பு கட்டை அமைக்க வேண்டுமா? பிரகாசமான விளக்கு அமைக்க வேண்டுமா? சாலையில் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டுமா? உள்ளிட்டவைகளை அரசுக்கு தெரிவித்து அதனை பயன்படுத்தி வாகன விபத்தை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் தற்போது இடங்களை பார்வையிட்டு சாலையிலே அளவீட்டு செய்யும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதன் மூலம் நாளடைவில் சாலை விபத்து குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- கடலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே எரியும் குப்பையால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
- நோய் பரவும் அபாயமும் நிலவி வருகின்றது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் தினந்தோறும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் குவிந்து எரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணையாளர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதற்கு இடத்தை மும்முரமாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். இது மட்டும் இன்றி குப்பைகளை சரியான முறையில் அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றார். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலம் அருகே நீண்ட நாட்களாக குப்பைகள் மலை போல் குவிந்து இருந்தன. இன்று காலை குப்பைகள் திடீரென்று எரிய தொடங்கியன. இதனை தொடர்ந்து தற்போது குப்பைகள் பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டது போல் கரும்புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகின்றது.
இதன் காரணமாக சாலையில் செல்லும் பொதுமக்களும், அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களும், அவதிக்குள்ளாகி நோய் பரவும் அபாயமும் நிலவி வருகின்றது. இது மட்டுமின்றி சிலருக்கு குமட்டல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுவதால் தற்காலிகமாக அந்த இடத்தில் இருந்து விலகி சென்று உள்ளனர். மேலும் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த குப்பைகள் தற்போது கொழுந்து விட்டு எரிவதால் என்ன செய்ய வேண்டும் என புரியாமல் பொதுமக்கள் தவித்து வருவதையும் காண முடிகிறது. ஆகையால் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்றப்படும் குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைவதால் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடலூர் சரவணா நகரில் துர்நாற்றத்துடன் கலங்கலான குடிநீர் வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து கடலூர் மையப்பகுதிகளில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் சரவணநகர், நாராயண நகர், விஜயதாஸ் நகர், பொன் நகர், அண்ணாமலை நகர், கேசவன் நகர், முத்தையா நகர், அம்பேத்கர் நகர், மார்க்கெட் காலனி தானம் நகர், நவநீதம் நகர், குமரன் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டி ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருவதாக மாநகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவி உள்ளது. மேலும் வருங்காலங்களில் மழைக்காலம் என்பதால் மேற்கொண்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நீக்க தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






