என் மலர்tooltip icon

    கடலூர்

    • தாட்கோ மூலம் கடன் வழங்க மறுக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளனர்.
    • இதனால் வரை அதற்கு தாட்கோ மூலம் வங்கி கடன் வழங்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தனி தொகுதி அமைப்பு செயலாளராக பாலு இருந்து வருகிறார். இவர் 2021-2022- க்கான ஆடு வளர்ப்பு சிறு தொழில் கடனை கடந்த 24.11.2020 அன்று தாட்கோ மூலம் 8 பேருக்கு கடன் பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தார். அப்பொழுது கடந்தாரர்களுக்கு விண்ணப்பம் தேர்வுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டு வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளனர். இது சம்பந்தமாக கடந்த 24.11. 2020 ஒவ்வொரு கடன் விண்ணப்பத்தாரர்களுக்கும் கடந்த 31/7/2021 அன்று நேர்காணல் நடை பெற்றுது. கடன் தாரர்களுக்கு 15 தினத்திற்குள் குமராட்சி தனியார் வங்கி மேலாளர் கடன் வழங்குமாறு உத்தரவு விண்ணப்பம் வந்துள்ளது. ஆனால் வங்கி மேலாளர் இந்த 8 பேரையும் அழைத்து நேர்காணல் வைத்து க தாட்கோ மாணியத்துடன் கடன் தருகிறேன் என்று ஒப்பந்தம் கொடுத்துள்ளார். ஆனால் இதனால் வரை அதற்கு தாட்கோ மூலம் வங்கி கடன் வழங்கவில்லை. மீண்டும் வங்கிக்கு சென்று கடந்த 18.02.2022 அன்று வங்கி மேலாளிடம் இது சம்பந்தமாக பேசியிருக்கிறார்கள். ஆனால் வங்கி மேலாளர் அலட்சியமாக இருந்து உள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாட்கோ அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வங்கிக்கு முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பு செயலாளர் பாலு தெரிவித்து உள்ளார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவி வித்யா ராஜசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதல் கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 8-ந் தேதி தொடங்கி , 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • விபரங்களை கல்லுாரி இணையதளமான tkgac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    கடலூர்:

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதல்வர் ராஜவேல் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    , 2022- 23ம் கல்வியாண்டில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, வருகிற 8-ந் தேதி தொடங்கி , 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. 8ம் தேதியன்று சிறப்பு பிரிவினருக்கும், 10-ந் தேதி சுழற்சி 1, அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகியவற்றுக்கும் நடக்கிறது. 11-ந் தேதி காலை சுழற்சி 2ல் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், கணினி அறிவியல் மற்றும் சுழற்சி 1, வணிக நிர்வாகம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், மாலையில் சுழற்சி 2, வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், 12-ந் தேதி வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 13-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் அனைத்து ஆவணங்களின் அசல், அதன் 3 நகல்கள், 3 புகை ப்படங்கள் மற்றும் சேர்க்கை கட்டணம் ஆகிவற்றை கொண்டுவர வேண்டும். மேலும் தரவரிசை மற்றும் சேர்க்கை விபரங்களை கல்லுாரி இணையதளமான tkgac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்ப ட்டுள்ளது.

    • ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரி நீர் திறப்பால் 200 ஏக்கர் நெற்பயிர் நாசமாயின.
    • விவசாயிகளுக்கு தெரியாமல் இரவு நேரங்களில் மீன்கள் பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குணமங்கலம் ஏரியானது 300 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இதில் அதிகபட்சமாக 12 அடி நீரை தேக்கும் நிலை இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் குணமங்கலம் ஏரியில் மீன்வளத்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு அதில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் தற்போது ஏரியிலிருந்து விவசாயிகளுக்கு தெரியாமல் இரவு நேரங்களில் மீன்கள் பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரானது வடிகால் மட்டும் பாசன வாய்க்கால் மூலம் அறுவடைக்கு தயாரான இப்பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கருக்கு மேல் உள்ள நெல் வயல்களில் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.

    • கடலூரில் மாநகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு- கடைகள் இடிக்கப்பட்டது.
    • மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் பெண்ணையாறு ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த இடங்களை ஆக்கிரமித்து வீடு, கடைகள் மற்றும் தடுப்பு சுவர்களை பொதுமக்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மாநகராட்சி ஆணையாளர் நாவேந்திரன் உத்தரவின் பெயரில் அந்த ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய வேண்டுமென அரசு சார்பில் முன்னதாகவே அறிவுறுத்தபட்டது. இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அருள் செல்வம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகள், 2 கடை, 4 சுற்றுசுவர் உள்ளிட்டவைகளை ஜேசிபி எந்திரத்தின் மூலம் அதிரடியாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. பின்னர் அதை அப்புறப்படுத்தினார். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்று மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

    • திட்டக்குடி அருகே கஞ்சா வியாபாரிகள் போலீசாரை தாக்கினர்.
    • அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே கோழியூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி கோழியூர் கால்வாய் பாலம் அருகே பைக்கில் சென்ற நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தபோது அந்த நபர்கள் இரும்புக்கம்பியை காட்டி மிரட்டியவாறு போலீசாரை தாக்கி கீழே தள்ளி விட்டு கையில் வைத்திருந்த கஞ்சா பாக்கெட் தூக்கியெறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதனை தொடர்ந்து திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் கோழியூரை சேர்ந்த பெருமாள் மகன் ஆனந்தராஜா (20) மற்றும் 19 வயது சிறுவன் என தெரிய வந்தது. இது குறித்து ஏட்டு முனுசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா- குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா விற்பனை செய்த இடங்கள் மற்றும் குட்கா போதை பொருள் குறித்த கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடந்த அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனை செய்த திட்டகுடி கீழ்செருவாய் சீனிவாஸ் (22), திருமாணிக்குழி பாலகிருஷ்ணன் (35), 17 வயது சிறுவன், சிதம்பரம் சிவா (24), விமல்ராஜ் (23), ஆலபாக்கம் பிரகாஷ் (28), கிஷோர் (20), புதுப்பேட்டை ரகுபதி வயது 22 , திட்டக்குடி கோழியூர் ஆனந்தராஜ் ( 20), செந்தூரை பிரவின் (19) ஆகிய 10 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். குட்கா விற்பனை செய்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

    கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கடலூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

    கடலூர்:

    காவிரி டெல்டா பகுதியில் அதிக கனமழை பெய்வதால் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரினை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இவ்வறிப்பினை தொடர்ந்து வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனை சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப் பின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், பொது மக்கள் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், நீர்நிலைகளின் அருகே குழந்தைகளை அனுமதித்தல், கால்நடைகள் மேய்த்தல், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது செல்பி எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் செய்திக் குறிப்பில் கூறியிருந்தார்.

    • மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு உயிர்பலி வாங்கும் இடமாக மாறியது. இதனால்அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க அங்கு சாலையின் நடுவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். இதனை தொடர்ந்து அங்கு சாலை நடுவே சிமெண்ட் கான்கிரீட் மூலம் பெரிய அளவில் வேகத்தடை அமைக்கப்பட்டது. உயிர் பலி தடுக்கஅமைக்கப்பட்டு இருந்தஇந்தவேகத்தடைஉயிர்பலிவாங்கும் வேக தடையாகமாறியது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், கோரி வந்தனர். இந்த வேகத்தடையை உடனடியாக அகற்றபடவில்லை என்றால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைதுறை அதிகாரி அதிரடியாக இந்த வேகத்தடையை முழுமையாக அகற்றினர் இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • விருத்தாசலத்தில் பணம் வைத்து சூதாடி இருவர் கைது செ்ய்யப்பட்டார்.
    • போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தில் உள்ள ஆயியார்மடம் மணிமுத்தாறு ஆற்றின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த பழமலைநாதர் பகுதியை சேர்ந்த ராஜ் (26), சதீஷ் (31) ஆகிய இருவரை கைது செய்தனர், மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விருத்தாசலம் அருகே மனைவியை இரும்பு தடியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • தகராறு முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மண்வெட்டியின் இரும்பு பிடியால் மனைவி குணசுந்தரி மீது சரமாரியாக தாக்கியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(37), இவரது மனைவி குணசுந்தரி (29). இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது.இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று ஆடி ப்பெருக்கை முன்னிட்டு மணிகண்டனுக்கும் அவரது மனைவி க்குமிடையே நேற்றிரவு மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த தகராறு முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மண்வெட்டியின் இரும்பு பிடியால் மனைவி குணசுந்தரி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த குணசுந்தரி வலியால் அலறி துடித்துள்ளார், அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்ப க்கத்தினர் குணசுந்தரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனயைில் சிகிச்சையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.
    • மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது.

    வேப்பூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம், 13-ந் தேதி மர்மமாக இறந்தார்.

    தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஸ்ரீமதியின் பெற்றோர் புகார் தெரிவித்து, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், ஸ்ரீமதியின் உடலை வாங்க மறுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாணவி இறப்புக்காக, 17-ந் தேதி நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பள்ளி, போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த, மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.

    நேற்று மதியம், மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது. அதில், விடுதி தரை தளத்தில் இருந்து மாணவியை, 3 பெண்கள், ஒரு ஆண் என, 4 பேர் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. இதில், ஜூலை, 13-ந் தேதி அதிகாலை, 5.24 மணி என, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வீடியோ காட்சி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மாணவியின் தாய் செல்வியின் வக்கீல் காசிவிஸ்வநாதன் கூறுகையில் மாணவி இறப்பு தொடர்பாக வீடியோவை பிட்டு பிட்டாக வெளியிடுவது ஏன், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை காவல் துறை முழுமையாக வெளியிட்டால் சந்தேகங்கள் தீர்ந்து விடும் என்றார்.

    இதுகுறித்து ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறியதாவது:-

    சி.சி.டி.வி. காட்சி பொய்யான தகவல். இதனை பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் 13-ந் தேதியே காண்பித்திருக்கலாம். 13-ந் தேதி பள்ளியில் காட்டப்பட்ட சிசிடிவி காட்சி. ஒரு நிமிடம் காண்பித்து உள்ளார்கள். அதில் தூக்கி செல்வது போல் காட்சிகள் இல்லை. இதனை யார்? வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

    இன்று காண்பித்தது அப்பட்டமான பொய்யான சி.சி.டி.வி. பதிவு. ஸ்ரீமதி விழுந்த இடம் வேறு, தூக்கி செல்லும் இடம் வேறு 5.30 மணிக்கு காண்பிக்கிறார்கள். 5:30 மணிக்கு மேல் (முன்பு) இரவு நேரத்தில் சி.சி.டி.வி. பதிவு வேலை செய்யவில்லையா? பதிவு முழுமையாக இல்லையா? எத்தனை மணிக்கு விழுந்தாள்? எப்படி துடித்தாள்? எப்படி கத்தினார்? என காண்பிக்கவில்லை. வாட்ச்மேன் மண்ணாங்கட்டி பெயரை மட்டும் குறிப்பிடுகிறார்கள். மற்ற 3 பேரை குறிப்பிடவில்லை. இதன் மூலம் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற ஜெயா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது தாய் ஜெயா (வயது 47). இவர் தனது மகன் ரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற ஜெயா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×