கடலூர் அருகே பெண் மாயம்

கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற ஜெயா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே பெண் மாயம்
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது தாய் ஜெயா (வயது 47). இவர் தனது மகன் ரவிச்சந்திரனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற ஜெயா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com