என் மலர்

  நீங்கள் தேடியது "Hanged body"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விருத்தாசலம் அருகே வாலிபர் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
  • வேல்முருகனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

  கடலூர்:

  விருத்தாசலம் அருகே புதுக்கூரப்பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கோவையில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது தமது ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்திருந்த வேல்முருக னுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வேல்முருகனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்பொழுது அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் வேல்முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×