search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழந்த  கபடி வீரர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிதி உதவி: அமைச்சர்கள், எம்.எல்.ஏ. நேரில் வழங்கினர்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதியுதவியை அமைச்சர்கள் மெய்யநாதன், சி.வி.கணேசன் மற்றும் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் வழங்கினர்.

    உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிதி உதவி: அமைச்சர்கள், எம்.எல்.ஏ. நேரில் வழங்கினர்

    • உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிதி உதவி அமைச்சர்கள், எம்.எல்.ஏ. ஆகியோர்களால் நேரில் சென்று வழங்கப்பட்டது.
    • உயிரிழந்த விமலின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சியும் பெற்று வந்தார். இவரது ஊரில் 'முரட்டுக்காளை' என்ற பெயரில் கபடி அணி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அணியினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் கபடி போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதன்படி கடந்த 24-ம் தேதி இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முரட்டுக்காளை அணியும் கலந்து கொண்டது. அப்போது நடைபெற்ற விளையாட்டில் கலந்து கொண்ட விமல் எதிரணியை நோக்கி ரெய்டு சென்றார். அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் வேகமாக ஓடி வந்து விமல் மீது விழுந்தார். இந்த நிலையில் விமல் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே சரிந்து விழுந்து இறந்து போனார். விமலின் மறைவால் அந்த போட்டிக்கு வந்திருந்த விளையாட்டு வீரர்கள், போட்டி நடத்தியவர்கள், விமலின் சொந்த ஊர்க்காரர்கள் உட்பட அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். உயிரிழந்த விமலின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், விமலின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கபடி போட்டி யில் உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்தினரை அமைச்சர்கள் மெய்யநாதன், சி.வி.கணேசன், நெய்வேலி சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூபாய் 3 லட்சம் நிதியினையும், அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியாக ரூ.2 லட்சத்தையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் சிவா. கார்த்திகேயன், யூனியன் சேர்மன் சபா.பாலமுருகன், துணைத்தலைவர் தேவகி ஆண்டவரசு, தி.மு.க. வை தலைவர் ராஜா முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அறிவழகன் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×