search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் முதுநகரில்  காணாமல் போன 3 சிறுமிகள் மீட்பு
    X

    கடலூர் முதுநகரில் காணாமல் போன 3 சிறுமிகள் மீட்பு

    • கடலூர் முதுநகரில் காணாமல் போன 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
    • சந்தேகப்படுபடியான வாகனங்கள் ஏதேனும் சென்றதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகள் திடீரென்று மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு சேர்ந்த 3 சிறுமிகள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள் திடீரென்று காணவில்லை. அப்போது அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் 3 சிறுமைகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பொதுமக்கள், சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் உடன்படித்த மாணவிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவர்களை தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 சிறுமிகள் காணாமல் போன சமயத்தில் எந்தெந்த பஸ்கள், சந்தேகப்படுபடியான வாகனங்கள் ஏதேனும் சென்றதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மாணவிகள் காணாமல் சென்ற நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றது. அதில் இருந்த நடத்துனரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது துப்பு கிடைத்தது. இதில் கடலூர் முதுநகரிலிருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு மூன்று சிறுமிகள் பஸ்ஸில் ஏறி வந்தனர். பின்னர் அதே பகுதியில் 3 சிறுமிகள் மீண்டும் இறங்கினர். இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் அதே பஸ்ஸில் ஏறினர். குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி என்ற பகுதிக்கு சென்று இறங்கி உள்ளனர் என்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கொத்தவாச்சேரி கிராமத்திற்கு சென்று அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த வீட்டில் மூன்று மாணவியர்கள் புதிதாக வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து மூன்று சிறுமிகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கடலூர் முதுநகர் பகுதிக்கு அதே ஊரை சேர்ந்த சிறுவன் ஒருவர் அவ்வபோது அவரது பாட்டி வீட்டிற்கு வந்து செல்வார். மேலும் 3 சிறுமிகளுடன் இந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது எங்கள் பகுதிக்கு செல்லக்கூடிய அரசு பஸ் பெண்களுக்கு இலவசம் என கூறியுள்ளார். மேலும் அவரது ஊர் கொத்தவாச்சேரி என தெரிவித்த காரணத்தினால் இந்த சிறுமிகள் பஸ்ஸில் அந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையின் காரணமாக திடீரென்று சென்று உள்ளனர். மேலும் பஸ்சில் இருந்த நடத்துனர் எங்கு செல்ல வேண்டும் என கேட்டபோது கொத்தவாச்சேரி என்று கூறியதால் அங்கு நடத்துனர் இறக்கி விட்டது தெரிய வந்துள்ளது. மேலும் 3 சிறுமிகளின் ஒரு சிறுமி தனது தாயார் செல்ஃபோனுக்கு அங்கிருந்த நபர்களிடமிருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் வந்துள்ளதால் அந்த பகுதியில் வசித்து வந்த சிறுவன் பெயரை கேட்டு வீட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 சிறுமிகளை மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோர்களிடம் சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கி வீட்டில் விட்டனர். இதனை தொடர்ந்து சிறுமிகள் காணாமல் சென்ற 8 மணி நேரத்தில் கண்டு பிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிவிரைவு படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டு தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது

    Next Story
    ×