விருத்தாசலத்தில் நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தாலி செயின் பறிப்பு

விருத்தாசலத்தில் நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தாலி செயினை மர்ம நபர் அறுத்து கொண்டு தப்பி ஓடி சென்றார்.அதிர்ச்சி அடைந்த ஜோதி அவரை துரத்தி பிடிக்க முயன்றார்.
விருத்தாசலத்தில் நடந்து சென்ற  வங்கி பெண் ஊழியரிடம்  தாலி செயின் பறிப்பு
Published on

கடலூர்:

விருத்தாசலம் கல்லூரி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், இவரது மனைவி ஜோதி(40). இவர் ஜங்ஷன் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் பணி முடிந்து நடந்து வீடு திரும்புகையில், கல்லூரி நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஜோதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி ஓடி சென்றார்.

அதிர்ச்சி அடைந்த ஜோதி அவரை துரத்தி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி மாயமாக மறைந்தார். இது குறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com