search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devanathasamy Temple"

    • திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஆண்டாள் உற்சவம் தொடங்கியது.
    • கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கி முதல் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்று ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் உற்சவம் தொடங்கப்பட்டது. இதனை யொட்டி ஆண்டாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் நேற்று சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மாலையில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியினர். பின்னர் முக்கிய மாடவீதியில் சாமி மீது உள்ள நடைபெற்றது. இதில் ஏராளமான பயபக்தியுடன் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ‌

    இதனைத் தொடர்ந்து தினந்தோறும் ஆண்டாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளி வீதிஉலாவும் நடைபெற உள்ளது. இதற்கிடையில் ஆடி அமாவாசை அன்று தேவநாதசுவாமி பெருமாளுக்கு பூ வங்கி சேவையும், வரலட்சுமி நோன்பு அன்று செங்கமலத் தாயாருக்கு பூ வங்கி சேவையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆடிப்பூர பெருவிழாவின் சிகர விழாவான வருகிற 1 ந்தேதி ஆடிப்பூரம் அன்று காலையில் பெருமாள், ஆண்டாள் மற்றும் தேசிகருக்கு விசேஷ சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மாலையில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் சிறிய அளவிலான தேரில் எழுந்தருளி தேர் வீதிஉலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×