திட்டக்குடி: டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர்கள் திடீர் மறியல்

திட்டக்குடி அருகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத வந்தவர்கள் திடீர் மறியல் நடந்தது.ராமநத்தம் போலீசார் அவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்து நீங்கள் கால தாமதமாக வந்து விட்டீர்கள். இனி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 
சாலை மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 
Published on

கடலூர்:

திட்டக்குடி அருகே கிரீன்பார்க் தனியார் பள்ளியில் டி.என். பி. எஸ்.சி. குரூப் 4 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தேர்வு எழுத வந்தவர்கள் காலதாமதம் எனக் கூறி 10-க்கும் மேற்பட்டோரை அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த மாண–வர்கள் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை–மறியலில் ஈடுபட்ட–னர்.

தகவலறிந்து வந்த திட்ட–க்குடி டி.எஸ்பி. அசோகன் மற்றும் ராமநத்தம் போலீசார் அவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்து நீங்கள் கால தாமதமாக வந்ததுவிட்டீர்கள். இனி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். மாணவர்கள் அனைவரும் கோபத்துடன் திரும்பி சென்றனர். இதில் சிலர் கண்ணீர் விட்டு அழுதபடி சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com