என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi Christian worship"

    • பண்ருட்டி கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    • நேர்த்தி கடனுக்காக பக்தர்கள் தலையில் மிளகாய்பொடி கரைசல் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.

    கடலூர்:

    பண்ருட்டி, திருவதிகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடை பெற்றது இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டுநேர்த்தி கடனுக்காகவும் வேண்டு தல் நிறைவேறவும் அலகு குத்திக்கொண்டு வாகனங்களை இழுத்தனர். பண்ருட்டி ஒன்றியம் வீரப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி சன்னதியில்ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷே கம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராத னையும் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி அய்யப்பன் சுவாமி ஜவுளி ஸ்டோர் நிறுவனத்தினர் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. பண்ருட்டி அருகே புலவனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பால முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு செடல் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்திக்கொண்டு தேர் இழுத்தனர். முன்னதாக நேர்த்தி கடனுக்காக பக்தர்கள் தலையில் மிளகாய்பொடி கரைசல் ஊற்றி அபிஷேகம் நடை பெற்றது.

    ×