கடலூர் அருகே மூச்சுதிணறலால் பெண் திடீர் சாவு

கடலூர் அருகே பெண் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்தார்.ஜெகதீசன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார்.
கடலூர் அருகே  மூச்சுதிணறலால் பெண் திடீர் சாவு
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி வினோதினி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்து வருகிறது. ஜெகதீசன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் வினோதினிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com