search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Interrogation of youth"

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சப்- இன்ஸ்பெக்டர் மனைவி கொலையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகத்தில் இரத்தக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தன. பண்ருட்டி காங்கே யன் குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சதாசிவம் மனைவி மலர்க்கொடி (வயது 54). இவர்களது மகன் சிவகுரு (30). போலீஸ்காரரான இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார் . நேற்று உடல் நிலை சரியில்லாத மலர்க்கொடி கடலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றார . பின்னர் மாலை ஆைணக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை . இதற்கிடையில் ஆனைக்குப்பத்தில் ஏற்க னவே வசித்த பழைய போலீஸ் குடியிருப்பில் மலர்க்கொடி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் .

    அப்போது மலர்க்கொடி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது . அவரை மர்ம நபர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது . இருப்பினும் ஒரு காது அறுக்கப்பட்டு , தோடோடு கிடந்தது. மற்றொரு காதில் இருந்த நகையை காணவில்லை. மேலும் தகவல் அறிந்ததும் சிவகுருவும் சம்பவ இடத்துக்கு வந்து , இறந்தது தனது தாய் மலர்க்கொடி தான் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்கொடி உடலை பார்வையிட்டு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் துணை போலீஸ் கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெ க்டர் குருமூர்த்தி, சப்-இ ன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகிய மூன்று பேர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததிலும் , பொதுமக்களிடம் நடத்திய விசாரணையிலும் , அந்த வழி யாக வாலிபர் ஒருவர் ரத்தக்கறையுடன் நடந்து சென்றது தெரியவந்தது

    . இந்த நிலையில் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை புதுவை மாநிலம் சாராயக்கடையில் இருந்து பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இந்த சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்பு உண்டா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு யாராவது இதில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பதை குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மலர்கொடி கொலை செய்யப்பட்ட இடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீசார் குடியிருப்பு பகுதி என்பதால் எந்நேரமும் போலீசார் சென்றுவரும் பகுதியில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×