திட்டக்குடியில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய குரங்கு

திட்டக்குடியில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி குரங்கு அவதிப்பட்டு சுற்றி வருகிறது.வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடியில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய குரங்கு
Published on

திட்டக்குடி பெரியார் நகர் பகுதியில் குரங்கு ஒன்று உடலில் தீ காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறது/ இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து உள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக அந்த குரங்கு தீக்காயங்கள் ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அவதிப்பட்டு சுற்றி வருகிறது. இதனைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது எனவே வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X

Maalai Malar
www.maalaimalar.com