search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayer Survey"

    • கடலூர் துறைமுகத்தில் நடுநிலை பள்ளியில் மேயர் ஆய்வு செய்தார்.
    • பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் சீமான் தோட்ட நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு வகுப்பறையாக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா? மற்றும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பதனை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு எந்த வித இடர்பாடுகள் இல்லாமல் பாடம் நடத்தி மாணவர்களின் கல்வி கற்கும் தரத்தை உயர்த்த வேண்டும் இவ்வாறு கூறினார். அப்பொழுது மாநகர திமுக செயலாளர் கே. எஸ்.ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி,மாநகராட்சி கவுன்சிலர்கள் இளையராஜா, பாலசுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • கடலூர் மாநகராட்சி பள்ளியில் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பள்ளிகளை தூய்மையாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

     கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? அரசு சார்பில் வழங்கப்படும் சத்துணவு சரியான முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா? மேலும் தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? சத்துணவுக்காக வழங்கப்பட்டுள்ள பொருட்கள் உள்ளதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

    பின்னர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு தரமாக வழங்குவதோடு சரியான முறையில் வழங்க வேண்டும் மேலும் பள்ளிகளை தூய்மையாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் என் குப்பை என் உரிமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. அப்போது உதவி செயற்பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷிணி ராஜா, பாலசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×