என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் இன்று விபத்து மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்: தனியார் நிறுவன அதிகாரி பலி
- சிதம்பரத்தில் இன்று விபத்து மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியத்தில் தனியார் நிறுவன அதிகாரி பலியானார் .
- விபத்தில் முத்துகுமரன் தூக்கி வீசப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரைப்பாளையத்தைை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 45). இவர் சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நோக்கி சென்றார். அப்போது எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதனை திருநின்றவூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரீஷ் ஒட்டிவந்தார். இந்த விபத்தில் முத்துகுமரன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முத்துகுமரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து சிதம்பரம் டவுன் போலீசார் விசாரிக்கிறார்கள்.
Next Story






