search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "44th Chess Olympiad tournament"

    • கடலூரில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மின்னனு வீடியோ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

    கடலூர்:

    பேரறிஞர் அண்ணாவால்'தமிழ்நாடு" என அறிவிக்கப்பட்ட ஜுலை -18-ம் நாளினை தமிழ்நாடு திருநாளாக கொண்டாடப்படும் வகையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல் அழிஞ்சிப்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட லூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஊராட்சிகளில் 1100 மரக்கன்றுகள் நடப்படப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தமிழ்நாடு திருநாளை கொண்டாடும் வகையில் 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலிம்பிக் ஜோதி விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளுதல், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் ஸ்டிக்கர் ஒட்டுதல், செஸ் போட்டிகள் நடத்துதல் மற்றும் செஸ் போட்டிகள் குறித்து மாணவ-மாணவியர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டிகள் நடத்துதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாகனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர். , சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ், துணைத் தலைவர் செல்ல பாண்டியன் பகுதி செயலாளர்கள் சதீஷ், தமிழ் முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×