என் மலர்
நீங்கள் தேடியது "in Cuddalore"
- கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
- பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்.
கடலூர்:
தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்.அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதில் கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், லால்பேட்டை, அண்ணாமலை நகர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் இருந்து வருகின்றன. இதன் காரணமாக சீதோசன மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது. இந்த நிலையில் பகல் நேரங்களில் வழக்கத்தை விட அதிக வெயில் அடித்து வரும் நிலையில் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் திடீர் மழை காரணமாக ஆங்காங்கே விவசாய பணிகள் பாதிப்படைந்து வருவதையும் காணமுடிகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:- கீழச்செருவாய் - 56.0, தொழுதூர் - 23.0 ,அண்ணாமலைநகர் - 22.4 4, கொத்தவாச்சேரி - 21.0, லக்கூர் - 21.0, குறிஞ்சிப்பாடி - 18.0, பரங்கிப்பேட்டை - 16.7, சிதம்பரம் - 15.2, வடக்குத்து - 13.0, ஸ்ரீமுஷ்ணம் - 12.3, புவனகிரி - 12.0, பெல்லாந்துறை - 9.8, லால்பேட்டை - 9.0,காட்டுமன்னார்கோயில் - 5.2, . சேத்தியாதோப்பு - 3.8, கடலூர் - 2.0, கலெக்டர் அலுவலகம் - 1.6 குப்பநத்தம் - 1.2, விருத்தாச்சலம் - 1.0 என் மொத்தம் 264.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.






