என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் தலையில் குழவி கல்லை தூக்கி போட்டு மகனை கொன்ற தந்தை
    X

    குடிபோதையில் தலையில் குழவி கல்லை தூக்கி போட்டு மகனை கொன்ற தந்தை

    • பண்ருட்டி அருகே சிறுவத்தூர் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன்.
    • கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே சிறுவத்தூர் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளி. இவரது மகன் அர்ஜுன். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு முருகன் மதுகுடிக்க பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்தார். இதனால் மனைவியுடன் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முருகன் வீட்டைவிட்டு வெளி சென்றார்.

    நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்குவந்த முருகன் மகன் என்று தெரியாமல் மனைவி என்று நினைத்துக் கொண்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன்அர்ஜுன் தலையில் குழவி கல்லை தூக்கிபோட்டார். இதனால் பலத்த காயமடைந்த அர்ஜுன் பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும்புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×