என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூட்டில் தார் ஊற்றப்பட்டுள்ள காட்சி.
பண்ருட்டி அருகே அரசு பள்ளி பூட்டுகளில் தார் ஊற்றிய மர்ம நபர்கள்
- பண்ருட்டி அருகே மர்ம நபர்கள் அரசு பள்ளி பூட்டுகளில் தாரை ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர்.
- பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு துவக்க பள்ளி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில்பள்ளி விடுமுறை தினமானநேற்று அப்பகுதியை சேர்ந்தசிலர் உள்ளே புகுந்து அங்குள்ள வகுப்பறை கட்டிடங்களுக்கு போடப்பட்டு இருந்து பூட்டுகளில் தாரைஊற்றி பூட்டை சேதப்படுத்தி உள்ளனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கல்வி குழு தலைவர் திரு நாயனார்,பஞ்சாயத்து தலைவர் காயத்ரி வெங்கடேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் தார் ஊற்றப்பட்ட பூட்டுகளுக்கு தீ வைத்து கூட்டில் உள்ள தாரை உருக செய்து பின்னர் பள்ளியை திறந்தனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது பள்ளிகளில்சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலைதடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






