என் மலர்tooltip icon

    கடலூர்

    • தமிழக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புகளை மீறிய, தமிழக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூர் அமைப்புக்குழு செயலாளர்மணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தண்டபாணி மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ்,சிவகாமி வடலூர் நகர அமைப்பாளர் இளங்கோவன், ஒன்றிய குழு அழகுமுத்து,ராஜேஷ் ,விவசாய சங்க செயலாளர், வெங்கடேசன் வாலிபர் சங்க ஒன்றிய துணை செயலாளர் அசோக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது.

    கடலூர்:

    பிரசித்தி பெற்ற சிதம்பரம் தி ல்லைக்காளியம்மன் கோவிலில் இந்து அறநிலை யத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் சரண்யா, ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோவில் அலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 4 லட்சத்து 40 ஆயிரத்து 648 கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு பணம் சிங்கப்பூர் டாலர் 107, மலேசியா ரிங்கட்-65, ஓமன் அரை ரியால், இலங்கை பணம் ரூ.1000 ஆகியவை இருந்தன.

    • பேராசிரியர் ரமேஷ், மற்றும் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.
    • சங்க கால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணி கள் கண்டெடுக்கப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், மற்றும் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர், அப்பொ ழுது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணியை கண்டறிந்தார்கள். இதை குறித்து அவர்கள் கூறியதாவது:- 

    ஏற்கனவே பண்ருட்டி பகுதி தென்பெண்ணை யாற்றங்கரையில் மேற்புர களஆய்வின் போது சுடு மண் பொம்மை, வட்ட சில்லு, சுடுமண் புகை பிடிப்பான், சுடுமண் அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆற்று படுக்கையில் ஆய்வு மேற்கொண்ட போது சங்க கால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணி கள் கண்டெடுக்கப்பட்டது கண்டெடுக்கப்பட்ட காதணிகள் வட்ட வடிவம் மற்றும் தோடு போன்ற வடிவத்தையும் கொண்டதாக உள்ளது. தோடு போன்ற அமைப்பினைக்கொண்ட காதணியின் மேற்புறத்தில் அழகாக கோட்டு ருவம் போன்று வரை யப்பட்டுள் ளது. இந்த கோட்டுஉருவம் அக்கால மக்களின் கலை நுணுக்கங்களை காட்டு வதாக உள்ளது, சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது. எளிதில் சேத மடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதுபோன்ற சுடுமண்ணா லான காதணிகள் மதுரை கீழடியில் நடந்த அகழ்வாய்வு களில் கிடைத்துள்ளது என்று கூறினார்கள்.

    • பம்பை, உடுக்கை, சிலம்பம், கும்மி, தப்பாட்டம், வாய்ப்பாட்டு, வயலின் இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடினார்கள்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருநாள் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் மங்கள இசை உடன் விளக்கேற்றி பொங்கல் வைத்து இயற்கை வழிபாடு செய்து கொண்டாடப்பட்டது. பின்னர் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    மேலும் பம்பை, உடுக்கை, சிலம்பம், கும்மி, தப்பாட்டம், வாய்ப்பாட்டு, வயலின் இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடினார்கள்.

    மேலும் அனைவரும் வண்ண ஆடைகளுடன் பாரம்பரிய உடைகள் அணிந்து மாணவ-மாணவிகள் விழாவில் கலந்து கொண்டது கல்லூரி முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் விழா ஒருங்கிணைப்பை தமிழ் துறையினர் மற்றும் நெய்தல் தமிழ் மன்றம் செய்திருந்தனர். முடிவில் தமிழ் துறை தலைவர் கீதா நன்றி கூறினார்.

    • நெய்வேலியை சேர்ந்த பிரபல ரவுடி மகேஷ் என்பவர், கடலூரை சேர்ந்த ஒரு நபர் கொடுத்த வெடிகுண்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
    • போலீசார் கைப்பற்றிய வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உஷாரான போலீசார் அவர்களை துரத்தி மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர். உடனே 2 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 பேரும் நெய்வேலி வட்டம் 21-ல் உள்ள ஒரு வீட்டில் பாத்ரூமிலும், நெய்வேலி வட்டம் 4-ல் உள்ள தைல தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

    அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் கூறிய தகவலின் பேரில் மேற்கண்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உடனே கைப்பற்றிய போலீசார் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் இரும்பு குழாய், கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் நெய்வேலியை சேர்ந்த பிரபல ரவுடி மகேஷ் என்பவர், கடலூரை சேர்ந்த ஒரு நபர் கொடுத்த வெடிகுண்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் நெய்வேலி வட்டம் 3-ஐ சேர்ந்த அகிலன் (வயது 21), நெய்வேலி வட்டம் 21-ஐ சேர்ந்த 14 வயது சிறுவன், நெய்வேலி வட்டம் 21-ஐ சேர்ந்த மகேஷ் (25), பார்த்திபன் (23), கடலூரை சேர்ந்த நபர் ஆகியோர் இந்த வெடிகுண்டுகள் பதுக்கிய விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் அகிலன், 16 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். எனினும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது? இதற்கு மூளையாக இருப்பது யார்? இந்த வெடிகுண்டுகள் பழிக்கு பழி சதித்திட்டத்தில் ஈடுபட பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை
    • காவலாளி திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்,

    கடலூர் ஆணைக்குப்பம் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). இவர் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் நேற்று இரவு சுப்பிரமணி வழக்கம் போல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி உறவினர்கள் இன்று காலை கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நேரில் பார்த்தனர்.அப்போது சுப்பிரமணி காணவில்லை. மேலும் அவரது ஒரு செருப்பு மற்றும் அவரது செல்ஃபோன் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக வெளிபுறத்தில் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சுப்பிரமணியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து கடலூர் புது நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் காவலாளி சுப்பிரமணி எங்கு சென்றார்? அவரது நிலை என்ன? என்பதனை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவலாளி திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருத்தாசலம் வட்டம், ஆலடி புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
    • அப்போது முதல் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீட்டில் மயங்கி விழுந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், பண் ருட்டி வட்டம், ரெட்டிப்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ராஜாராமன் (வயது 35). விருத்தாசலம் வட்டம், ஆலடி புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமன் பைக் விபத்தில் சிக்கினாராம்.

    அப்போது முதல் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி ராஜாராமன் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடலூர் அருகே விஷம் குடித்து கட்டிட ெதாழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு, குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள தென்குத்து பிதாநகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 41). இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு, குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது, இதனால் இவருக்கும், இவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இருவருக்கு சண்டை ஏற்பட்டதால், மனமுடைந்த சந்தோஷ்குமார், விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை அறிந்த உறவினர்கள், வடலூர் தனியார் ஆஸ்பத்திரியில், சேர்ந்தனர், பின்னர், மேல்சிகிச்சைக்காக, கடலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர், அங்கு சந்தோஷ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், சந்தோஷ்குமார், முன்னதாக இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து புகாரி ன்பேரில் வடலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள், 

    • சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
    • தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திருவந்திபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்துவந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 14 வயது சிறுமி படிக்கும் பள்ளியில் படித்து வந்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர். இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரியவந்தது. இதனால் 2 பேரும் பள்ளியில் இருந்து படிப்பை நிறுத்திவிட்டனர். இதற்கிடையே அந்த சிறுமி கர்ப்பமானார்.

    அதிர்ச்சியடைந்த சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார். உடனே காதலன் உனனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதியளித்தார். அதன்பின்னர் அந்த சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அப்போது சிறுவன் தனது அக்காளிடம் நான் இவளை திருமணம் செய்ய உள்ளேன். எனவே பத்திரமாக பாதுகாக்கும்படி கூறிவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார். தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விபரத்தை கண்ணீர் மல்க அந்த சிறுமி கூறினார். சம்பவம் நடந்த இடம் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் உடனடியாக அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • கிறிஸ்தவ ஆலயம் முன்பு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பையை கொட்டி சென்றதாக கூறப்படுகிறது.
    • செந்தில் சம்பவ இடத்திற்கு வந்து திடீரென்று ஆயர் பிலிப் ரிச்சர்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று கிறிஸ்தவ ஆலயம் முன்பு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பையை கொட்டி சென்றதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கிறிஸ்தவ ஆலய ஆயர் பிலிப் ரிச்சர்ட் என்பவர் துப்புரவு ஊழியர்களிடம் இது சம்பந்தமாக கேட்டபோது, கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில் எங்களிடம் குப்பை கொட்ட சொன்னதாக கூறினார்கள்.

    இது தொடர்பாக பிலிப் ரிச்சர்ட், செந்தில் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து செந்தில் சம்பவ இடத்திற்கு வந்து திடீரென்று ஆயர் பிலிப் ரிச்சர்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் பிலிப் ரிச்சர்ட் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் பிரசாத்துக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • அக்கம் உள்ள்வர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே சமிட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகன் ராம்பிரசாத் (வயது 25) விவசாயி இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் பிரசாத்துக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் ராம் பிரசாத்துக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. 

    சம்பவத்தன்று ராம்பிரசாத் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் உள்ள்வர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராம் பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு அனுமதியுடன் சந்தன மரங்கள் வளர்த்து வருகிறார்.
    • சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மா.புடையூர் மயிலாடும்பாறை பகுதியில் வசித்து வருபவர் நாராயணசாமி (வயது 72). இவர் அந்த பகுதியில் தோட்டத்து வீட்டில் 22 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். எனவே அந்த பகுதியில் அரசு அனுமதியுடன் சந்தன மரங்கள் வளர்த்து வருகிறார். இதனை வெட்டுவதற்கு நாராயணசாமி அனுமதி பெற்று இருந்தார். 

    நேற்று இரவு மர்மநபர்கள் அங்கு சென்றனர். அவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்று உள்ளனர். இன்று காலை நாராயணசாமி ேதாட்டத்துக்கு சென்றார். அப்போது சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    ×