என் மலர்
கடலூர்
- காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
- விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் சீதோசன நிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அதன்படி கடலூர் நகர், புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த கடும் குளிரால் சாலைகளில் தெருக்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை புகை மண்டலமாக பணி அடர்ந்து காணப்படுகிறது.
இந்த பனியினால் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது முன்னால் செல்லும். வாகனங்கள் தெரியாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றனர்.
குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை பணியினால் உண்டா கும் கடும் குளிரை தாங்க முடியாமல் அவதி ப்படுகின்றனர். மேலும் இதனால் பல்வேறு நோய்களும் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதுகிறது. பிற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டம் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் கடும் பணி பெய்தாலும் அளவுக்கு அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீதோசன நிலை மாற்றத்தின் போது ஏற்படும் ஒவ்வொரு இடர்பாடுகளிலும் அளவுக்கு அதிகமாக பாதிக்கின்றனர்.
- சந்தேகம் அடைந்த தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர்களிடம் இத்தகவலை கூறினார்.
- போலீசார் கனகசபையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:
வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக செல்வராஜ் பணியாற்றி வருகிறார். விருந்தாசலம் கொட்டாரம் குருநாதன் மகன் கனகசபை (வயது 45) என்பவர் தன்னை வார பத்திரிகையின் மாவட்ட நிருபர் என்றும், மணி என்பவர் மனித உரிமை அமைப்பின் செயலாளர் எனவும், பூண்டியாங்குப்பம் நல்லி மகன் ராமலிங்கம் மாவட்ட விவசாய சங்கத்தவைவர் எனவும் கூறிக்கொண்டு செல்வராஜிடம் சென்று பள்ளியில் உள்ள சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.
சந்தேகம் அடைந்த தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர்களிடம் இத்தகவலை கூறினார்.இது குறித்து ஊழியர்கள் அவர்களிடம் விசாரித்த போது கார்த்திகேயன் என்பவரை 3 பேரும் கையால் அடித்து தாக்கியுள்ளனர். இது குறித்து வடலூர் போலிசில் பள்ளி நிர்வாகத்தால் புகார் அளிக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கனகசபையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள ராமலிங்கம், மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.
- மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன.
- பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார்.
கடலூர்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் அலங்காரம் செய்து, ஆங்காங்கே கரும்புகள் வைக்கப்பட்டு இருந்தது. தாரை, தப்பட்டையும் இசைக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகம் விழா கோலம் பூண்டது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன. அனைவரையும் வரவேற்று கோலப்பொடியால் எழுதப்பட்டு இருந்தது. அப்போது திரைப்பட பாடல்களும் இசைக்கப்பட்டன.
சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற பாடல் திடீரென இசைக்கப்பட்டது.
இந்த பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார். இதை சக பெண் கவுன்சிலர்கள் கைதட்டி வரவேற்றனர். அவரோடு மற்றொரு சிறுமியும் சேர்ந்து நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.
அவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக சுகாதார ஆய்வாளர் ஒருவரும் தப்பாட்டத்துக்கு நடனமாடினார்.
- கிராம மக்கள் வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்
- கிராம மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
கடலூர்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி, காவனூர் இடையே வெள்ளாறு அமைந்துள்ளது, இந்த ஆற்றின் கரையோரம் கள்ளிபாடி காவனூர், மருங்கூர், கீரனூர், வல்லியம், சக்கரமங்களம், கார்மாங்குடி, மேலப்பாளையூர், தொழூர், கொடுமனூர், கீழப்பாளையூர், தேவங்குடி, பவழங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா அலுவலகம், மருத்துவமனை பள்ளி, கல்லூரி என பல்வேறு விவசாய பணிகளுக்கு பொதுமக்கள் இந்த ஆற்றை கடந்து தான் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு செல்ல வேண்டும்
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காவனூர், கள்ளிப்பாடி இடையே மேம்பாலம் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும், என கிராம மக்கள் வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர். கடந்த 7 ஆண்டிற்கு முன் காவனூர், கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்க இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இதனால் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
தற்போதைய சட்ட சபையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறி, காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராசாபிள்ளை, மருங்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாபு, கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோர் தலைமையில், வீதிகளிலும் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டியதோடு வெள்ளாாற்றுக்கு நடுவே நின்று கருப்பு கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
அரசு அறிவித்தபடி வெள்ளாற்றில் பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி, சட்ட சபையில் அறிவித்து விரைந்து பாலம் அமைக்க உரிய நடவடிகை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்
- பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்.
- அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மாநகர புதிய பஸ் நிலையம் செல்வதற்கு அதிக தூரம் இருப்பதால் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திருமணத்தை திரும்ப பெற வேண்டும். கடலூர் மாநகராட்சிக்கு அளித்துள்ள வல்லுனர் குழு அறிக்கை தவறான தகவலை கொடுப்பதால் திரும்ப பெற வேண்டும். கொண்டங்கி ஏரி அருகில் பஸ் நிலையம் அமைத்ததால் சுற்றுச்சூழல் மாசுபடும். கலெக்டர் அலுவலகம் அருகே வெள்ள அபாய பகுதி என கூறி பஸ் நிலையம் அமைப்பதை தடுக்க கூடாது.
புதிய பஸ் நிலையம் அமைக்க பொருத்தமான இடம் கிடைக்கும் வரை தற்போது உள்ள பஸ் நிலையத்தை நவீனப்படுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மன்சூர், அனைத்து பொது நல அமைப்புகளின் செயலாளர் ரவி, பொது நல அமைப்பு தலைவர் திருவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜ், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, தமிழ்நாடு மீனவர் பேரமைப்பு தலைவர் சுப்புராயன், தனியார் பஸ் பேருந்து தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- வாகனத்தை அறிவழகன் ஓட்டி சென்றார்.
- அறிவழகனுக்கு தலையில் பலத்த காயமும்,சுதாகருக்கு இடது கையிலும், பாரிவேந்தருக்கு வலது கால் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.
க்டலூர்:
வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாரிவேந்தர் ( வயது29) பன்னீர்செல்வம் மகன் அறிவழகன் ( 26) தர்மலிங்கம் மகன் சுதாகர்( 30) ஆகிய 3 பேரும் பாரிவேந்தருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக கச்சிமைலூர் சென்றுவிட்டு மீண்டும் அரியநாச்சி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை அறிவழகன் ஓட்டி சென்றார். பாசார் கிராமம் கொளஞ்சியப்பன் வயல் அருகே வந்தபோது வளைவில் வாகனம் திரும்பும் போது எதிர்பாராத விதமாக இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அறிவழகனுக்கு தலையில் பலத்த காயமும்,சுதாகருக்கு இடது கையிலும், பாரிவேந்தருக்கு வலது கால் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. காயம்பட்ட 3 பேரையும் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அறிவழகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். மற்ற 2 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிந்து இறந்த அறிவழகன் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
- வனத்துறையினர் பயிரிட்டுள்ள சந்தன மரக் கன்றுகளை ஆய்வு செய்து வந்தனர்.
- காட்டுப் பகுதியில் ஓடையின் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி இளைஞர்கள் பார்த்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம. புடையூர் கிராமத்தில்அரசு அனுமதியுடன் விவசாயிகள் சந்தன மரக்கன்றுகளை தங்களது விலை நிலத்தில் பயிரிட்டு உள்ளனர். தற்போது 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வனத்துறையினர் அவ்வாறு பயிரிட்டுள்ள சந்தன மரக் கன்றுகளை ஆய்வு செய்து வந்தனர். தற்போது மரம் வெட்டும் சூழ்நிலையில் உள்ளதாக பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் கூறி சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாராயணசாமி (வயது 70), இவர் நிலத்தில் இருந்த 12 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தினர். நேற்று முன்தினம் இதே போல் இளங்கோவன் (40), இவரது நிலத்தில் 5 சந்தனமரங்களை வெட்டி கடத்தி உள்ளனர். தொடர்ச்சியாக மாப்புடையூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் உள்ள சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12:30 மணி அளவில் காட்டுப் பகுதியில் ஓடையின் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி இளைஞர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் கார் மற்றும் அதிலிருந்த 4 நபர்களை பிடித்த போலீசார், சந்தனமர கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயப்பிரியா திருநாவலூர் அன்னை தெரசா கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்து வீட்டில் இருந்தார்.
- இரவு 11மணி அளவில்வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போனார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுதெரு மகாலிங்கம் இவரது மகள் ஜெயப்பிரியா (23) இவர்,திருநாவலூர் அன்னை தெரசா கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (11ம்தேதி) இரவு 11மணி அளவில்வீட்டிலிருந்து திடீரென்று காணாமல்போனார். பல இடங்களில் தேடி எங்கும கிடைக்தாததால் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் இவரது அண்ணன் பிரகாஷ் புகார் கொடுத்தார்.புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவுசெய்து தீவிரமாக தேடி வருகிறார்.
- ஸ்ரீராமன் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு அரசுப் பஸ்சில் வந்துள்ளார்.
- பஸ்சின் நடத்துனர் செல்வம் இந்த பஸ் புறவழிச்சாலை வழியாக தான் செல்லும் என்றும் அச்சுறுத்தலாக கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி கடை வீதியை சேர்ந்தவர் கோட்டையார்(எ)ஸ்ரீராமன். இவர் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு அரசுப் பஸ்சில் வந்துள்ளார். இந்தப் பேருந்து கடலூர் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாமல் வெளியில் இருந்து பயணிகளை இறக்கி விட்டு காரைக்காலுக்கு உடனே புறப்பட்டது. அதே வண்டியில் அவர் புவனகிரி செல்வதற்கு பயணச்சீட்டு கேட்டுள்ளார். ஆனால் பஸ்சின் நடத்துனர் செல்வம் இந்த பஸ் புறவழிச்சாலை வழியாக தான் செல்லும் என்றும் அச்சுறுத்தலாக கூறினார். பின்னர் இந்த பயனியை பு.முட்லூர் தீத்தாம்பாளையம் சந்திப்பில் இறக்கி விடப்பட்டார்.
இதனால் மனஉலைச்சல் அடைந்த ஸ்ரீராமன், நாகப்பட்டினம் பொது மேலாளருக்கு புகார் எழுதியுள்ளார். இதன் மீது விசாரணை நடத்திய மேலாளர் சம்பந்தப்பட்ட நடத்துனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சம்பளத்தில் பிடித்தம் செய்தார். இனிவரும் காலங்களில் காரைக்கால் சிதம்பரம் பாண்டிச்சேரி தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் உரிய வழித்தடமான புவனகிரி வழியாகவே இயக்க வேண்டும் என மேலாளர் பஸ் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
- கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.
- ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் முதல் 35 ரூபாய் வரை விற்பனையானது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய நெசலூர், கொளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, வரம்பனூர், கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகள் விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்து வருவர்.
இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் காணும் பொங்கலன்று கறி சமைத்து உண்ணும் பழக்கம் நமது கிராமங்களில் உள்ளது. அதன் காரணமாக இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க புதுச்சேரி, திருச்சி, சென்னை தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வேப்பூர் சந்தையில் குவிந்தனர்.
அதன்படி கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது. ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் முதல் 35 ரூபாய் வரை விற்பனையானது. வழக்கத்தை விட 3 ஆயிரம் ரூபாய் வரையில் ஆட்டின் விலை இந்த வாரம் உயர்ந்திருந்தது. பொங்கல் பண்டிகை என்பதால் இன்று காலை 5 மணி முதல் 9 வரை ஆட்டு சந்தையில் காலை 8 மணி நிலவரப்படி 4 மணி நேரத்துக்குள் 3500 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 3 கோடியாகும்.
1500 க்கும் மேற்பட்ட ஆடு வளர்ப்போரிடம் இருந்து 200க்கும் மேற்பட்டோர் வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையிலும் ஆடுகளை வாங்கிச் சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர்.
- நிலம் கையகப்படுத்தப்பட்டால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும்.
- ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, அம்மன் குப்பம், கரிவெட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாய பெருங்குடிமக்கள் என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.
அப்படியே நிலம் கையகப்படுத்தப்பட்டால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும். ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் சம்மதிக்கவில்லை. இதுகுறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எனினும் என்.எல்.சி. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் முத்தரவு பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டுமென இன்று வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் ஒன்று திரண்டு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் டி.எஸ்பி. ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது.
- கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.
- கோவில் ஊழியர்கள் 6 பேர் உட்பட 30 பேர் உண்டியல் எண்ணும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். மேலும் பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தி சாமி கும்பிட்டு செல்வார்கள்.
பாடலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இப் பணியில் கோவில் ஊழியர்கள் 6 பேர் உட்பட 30 பேர் உண்டியல் எண்ணும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை எவ்வளவு நகை, வெள்ளி பொருட்கள், பணம் என்பது தெரியவரும். மேலும் கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி கடைசியாக உண்டியல் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.






