என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புவனகிரி அருகே பயணியை இறக்கிவிட்ட அரசு பஸ் கண்டக்டருக்கு 1000 ரூபாய் அபராதம்
    X

    புவனகிரி அருகே பயணியை இறக்கிவிட்ட அரசு பஸ் கண்டக்டருக்கு 1000 ரூபாய் அபராதம்

    • ஸ்ரீராமன் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு அரசுப் பஸ்சில் வந்துள்ளார்.
    • பஸ்சின் நடத்துனர் செல்வம் இந்த பஸ் புறவழிச்சாலை வழியாக தான் செல்லும் என்றும் அச்சுறுத்தலாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி கடை வீதியை சேர்ந்தவர் கோட்டையார்(எ)ஸ்ரீராமன். இவர் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு அரசுப் பஸ்சில் வந்துள்ளார். இந்தப் பேருந்து கடலூர் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாமல் வெளியில் இருந்து பயணிகளை இறக்கி விட்டு காரைக்காலுக்கு உடனே புறப்பட்டது. அதே வண்டியில் அவர் புவனகிரி செல்வதற்கு பயணச்சீட்டு கேட்டுள்ளார். ஆனால் பஸ்சின் நடத்துனர் செல்வம் இந்த பஸ் புறவழிச்சாலை வழியாக தான் செல்லும் என்றும் அச்சுறுத்தலாக கூறினார். பின்னர் இந்த பயனியை பு.முட்லூர் தீத்தாம்பாளையம் சந்திப்பில் இறக்கி விடப்பட்டார்.

    இதனால் மனஉலைச்சல் அடைந்த ஸ்ரீராமன், நாகப்பட்டினம் பொது மேலாளருக்கு புகார் எழுதியுள்ளார். இதன் மீது விசாரணை நடத்திய மேலாளர் சம்பந்தப்பட்ட நடத்துனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சம்பளத்தில் பிடித்தம் செய்தார். இனிவரும் காலங்களில் காரைக்கால் சிதம்பரம் பாண்டிச்சேரி தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் உரிய வழித்தடமான புவனகிரி வழியாகவே இயக்க வேண்டும் என மேலாளர் பஸ் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×