என் மலர்
கடலூர்
- 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து உள்ளது.
- பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலி ருந்து நீக்கம் செய்ய ப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ளசெய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
எனவே, வருகிற 20- ந்தேதி கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு , ஐடிஐ , டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறும், இம்மு காமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலி ருந்து நீக்கம் செய்ய ப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- தறிகெட்டு ஓடிய கார் கெடிலம் ஆற்றில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு சென்றனர்.
- விபத்து குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சபாபதி (வயது 35). இவர் நேற்று இரவு காரில் கடலூர் கம்மியம்பேட்டை ஜவான்பவன் இணைப்பு சாலை வழியாக கெடிலம் ஆற்றங்கரையில் சென்றுகொண்டிருந்தார். காசிவிஸ்வநாதீஸ்வரர் கோவில் அருகே வளைவில் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
தறிகெட்டு ஓடிய கார் கெடிலம் ஆற்றில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு சென்றனர். விபத்தில் சிக்கிய சபாபதி, அவரது நண்பர் சஞ்சய்காந்தி ஆகியோரை மீட்டனர். இவர்கள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இடுவர்.
- வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.
கடலூர்:
தை மாதம் 1-ந் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் விழாவை குடும்பத்துடன் கோலாக லமாக கொண்டாடி னார்கள். இதனை யொட்டி பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் புதிய பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் விழாவை குடும்பத்துடன் ஆனந்தமாக கொண்டாடினார்கள். மேலும் பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்ததையும் காணமுடிந்தது.
இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து கொண்டாடுவார்கள். இதனை தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்கள் தோறும் உள்ள வீடுகளில் மாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது. மேலும் வீடுகளில் உள்ள மாடுகளை தங்கள் பிள்ளைகள் போல் கருதி வளர்த்து அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.
இன்று மாட்டுப் பொங்கல் முன்னிட்டு வீடுகளில் உள்ள மாடுகளை காலையில் குளிப்பாட்டி கொம்புகளை தீட்டி புதிய பல்வேறு வண்ணங்களை பூசி மகிழ்வார்கள். பின்னர் மாடுகள் மீது மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை பூசி வீடுகளில் வணங்கி மகிழ்ந்தனர். மேலும் இன்று மாலை வீடுகளில் உள்ள மாடுகளை வண்டிகளில் கட்டி கொம்புக்களில் பலூன், வண்ணக் காகிதங்கள் போன்றவற்றால் அலங்கரித்து ஊர்வலமாக அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் சிறுமிகளை ஏற்றிக் கொண்டு ஆரவாரமாக கத்திக்கொண்டு கோவி லுக்கு சென்று தெருக்களில் ஆரவாரத்துடன் மாட்டுப்பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள மாடுகளை காலை முதல் ஊழியர்கள் குளிப்பாட்டி சுத்தம் செய்தனர் .பின்னர்கொம்புகளுக்கு வர்ணம் பூசி பலூன்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோமாதா என்று அழைக்க கூடிய மாடுகளை வணங்கி அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி ஆனந்தமாக கொண்டாட உள்ளனர்.
- “பொங்கலோ பொங்கல்” கூறி பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
- குடும்பமாக நின்று சாமி கும்பிட்டு ஒன்று கூடி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
கடலூர்:
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா தமிழக முழுவதும் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வீடுகளிலும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வீட்டில் புது பானைகள் மற்றும் வெண்கல பானைகளில் பூசையிட்டு பொங்கலிட்டு குடும்பம் சகீதமாக புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் "பொங்கலோ பொங்கல்" கூறி பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வீடுகளில் இறைச்சி மற்றும் மீன்கள் வாங்கி சமைத்து அதனை படையலிட்டு குடும்பமாக நின்று சாமி கும்பிட்டு ஒன்று கூடி சாப்பிட்டு மகிழ்வார்கள். இதனை யொட்டி இன்று காலை முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர் இதனை தொடர்ந்து இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு அணிவகுத்து நின்று வாங்கி சென்றனர்
மேலும் பலர் மீன் வாங்கும் இடத்தில் மீன்களை ஏலம் எடுத்து ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றதையும் காண முடிந்தது இது மட்டும் இன்றி கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கோழி ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதையும் காண முடிந்தது மேலும் நாளை காணும் பொங்கல் என்பதால் தங்களுக்கு தேவையான மீன்கள் மற்றும் இறைச்சிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றதையும் காண முடிந்தது.
இதன் காரணமாக கடலூர் துறைமுகம் பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு காணப்பட்டதால் மாட்டுப் பொங்கல் விழா களைக்கட்டியது. இது மட்டுமின்றி மீன் வியாபாரிகள் இன்று பொதுமக்கள் அதிகளவில் மீன்கள் வாங்குவதால் அனைத்து வகையான மீன்களையும் வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றதையும் காண முடிந்தது.
- திங்கட்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
- கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
கடலூர்:
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. மாட்டுப்பொங்கல் இந்த நாளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை நன்றாக குளிப்பாட்டி, அவைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு மற்றும் அலங்கார பொருட்கள் அணிவித்து அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பி
ன்னர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கால்நடை களை ஊர்வலமாக கொண்டு செல்வார்கள். இதைத்தொடர்ந்து கால்நடைகளுக்கு பொங்கல், பழங்கள் வழங்குவது வழக்கம். மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இந்த விழாவையொட்டி பண்ருட்டி கடைவீதியில் கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் மூக்கணாங்கயிறு, சலங்கை மணி, பெல்ட், அலங்கார கயிறுகள், பலூன்கள், கால்நடைகளை கட்டி இழுப்பதற்கான புதிய கயிறுகள், கொம்புகளுக்கு தீட்டப்படும் வண்ணங்கள், கலர் பவுடர்கள், பலூன்கள் ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் மற்றும் வீடுகளில் கால்நடைகளை வளர்க்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான விதவிதமான அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
- மாலையில் மாடுகளுக்கு வண்ண பலூன் கட்டி ஊர்வலம் செல்வதற்கு தயாராகி உள்ளனர்
- சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு மாலையில் மாடுகளுக்கு வண்ண பலூன் கட்டி ஊர்வலம் செல்வதற்கு தயாராகி உள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19- ந் தேதி ஆற்று திருவிழாவை வருடந்தோறும் மாவட்ட முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீர்த்தவாரிக்கு ஆறுகளில் சாமி ஊர்வலமாக நேரில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மலட்டாறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் திரண்டு காலை முதல் மாலை வரை ஆனந்தமாக குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்து வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வரும் உணவுகளை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு தங்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறி வகைகள் வாங்கிகொண்டு மகிழ்வாக வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆறுகளிலும் மற்றும் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆற்று திருவிழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நவேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தென் பெண்ணையாறு பகுதிகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் எளிமையாக வந்து செல்வதற்கு சரியான முறையில் சுத்தம் செய்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே. எஸ்.ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
- 3பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர் :
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, உலகநாதன், ஆகியோர் தலைமையில் போலீசார் குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரிக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா சுமோ காரினை வழிமறித்து சோதனை செய்தனர் .அதில் 11 மூட்டை ஹான்ஸ் 5 மூட்டை, கூல் லிப் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் காரில் வந்த இளைஞர்கள் 3பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குறிஞ்சிப்பாடி பாலாஜி (வயது33), வடலூர் ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் மகாராஜன் (27), வடலூர் ஆபத்தானரணபுரம் மாரியம்மன் கோவில் தெரு விக்னேஷ் (21)என்பது தெரிய வந்தது இதனைத்தொடர்ந்து 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 200 கிலோ, ஹான்ஸ், கூல் லிப் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- 35 வயது மதிக்கத்தக்க ஆண் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்
கடலூர்:
திட்டக்குடிக்கு அருகே இன்று அதிகாலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் இந்தியன் வங்கி எதிர்புறம் 35 வயது மதிக்கத்தக்க ஆண் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் தெரியவில்லை. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார் .இது குறித்து வழக்கு பதிவு செய்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
- ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ராஜ விநாயகர் வீதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர்ஆல்பேட்டை பாபு தலைமையில் 44 வீட்டிலும் மற்றும் முத்தாலம்மன் கோவில் ஆலயத்திலும் தங்களுக்கு குண்டு சாலை சாலை ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- டிப்பர் லாரிகளில் அதிக அளவு ஜல்லி, மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கி, ரூ1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது.
கடலூர்:
கடலூரில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை செய்ய கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுதாகர் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையில், போக்குவரத்து துறை அதிகாரிகள் கடலூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது டிப்பர் லாரிகளில் அதிக அளவு ஜல்லி, மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கி, ரூ1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஷேர் ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றி சென்ற டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு வாக்கு சக்கர வாகனங்களை தணிக்கை செய்தனர். அப்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களுக்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது போன்ற அறிவுரைகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.
- இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுபற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (வயது 50) என தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சரகம் திராசுபாளையம் கிராமத்தில் விழுப்புரம்- கடலூர் சாலைஓரம் இன்று காலை விவசாயி ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுபற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தொடர்ந்து நடந்த விசாரணையில் பிணமாக கிடந்தவர் தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (வயது 50) என தெரிய வந்தது. இவரை மர்மநபர்கள் அடித்து கொன்று வீசி சென்றார்களா? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் ரோந்துபணியில்ஈடுபட்டுஇருந்தனர்.
- எரிசாராய பாக்கெட்களை அரசு அனுமதிஇல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ)சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் ரோந்துபணியில்ஈடுபட்டுஇருந்தனர். அப்போது பண்ருட்டி பாரதி நகர் வடக்கு தெரு முருகன் மனைவிகிருஷ்ணவேணி (வயது50).இவர்வீட்டின் பின்புறம் அரசால்தடைசெய்யப்பட்டஎரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதிஇல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடம் இருந்து எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






