search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்று திருவிழா 19-ந் தேதி நடக்கிறது  தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்யும் பணி
    X

    கடலூர் தென்பெண்ணை ஆற்றில் சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அருகில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா உள்ளார்.

    ஆற்று திருவிழா 19-ந் தேதி நடக்கிறது தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்யும் பணி

    • மாலையில் மாடுகளுக்கு வண்ண பலூன் கட்டி ஊர்வலம் செல்வதற்கு தயாராகி உள்ளனர்
    • சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு மாலையில் மாடுகளுக்கு வண்ண பலூன் கட்டி ஊர்வலம் செல்வதற்கு தயாராகி உள்ளனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19- ந் தேதி ஆற்று திருவிழாவை வருடந்தோறும் மாவட்ட முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீர்த்தவாரிக்கு ஆறுகளில் சாமி ஊர்வலமாக நேரில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மலட்டாறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் திரண்டு காலை முதல் மாலை வரை ஆனந்தமாக குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்து வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வரும் உணவுகளை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு தங்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறி வகைகள் வாங்கிகொண்டு மகிழ்வாக வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆறுகளிலும் மற்றும் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆற்று திருவிழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நவேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தென் பெண்ணையாறு பகுதிகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் எளிமையாக வந்து செல்வதற்கு சரியான முறையில் சுத்தம் செய்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே. எஸ்.ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×