என் மலர்
கடலூர்
- 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது.
- முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தோப்பிருப்பு துணை மின் நிலையத்தில் கடந்த 7-ந் தேதி 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது. காணாமல் போன அலுமினிய காயில் ஒயரை மின்துறை ஊழியர்கள் தேடிவந்தனர். அப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக தோப்பிருப்பு துணை மின் நிலைய இளநிலை மின் பொறியாளர் ரவி (வயது 56) பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக போலலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் குட்டியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் முருகன் அளித்த தகவலின்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பொங்கல் விடுமுறை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி இரவு குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
- நேற்று மாலை வந்து பார்த்தபோது குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 7 மோட்டார்கள் திருடு போனது தெரி யவந்தது. நேற்று மாலை வந்து பார்த்தபோது குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 7 மோட்டார்கள் திருடு போனது தெரி யவந்தது.
கடலூர் :
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (வயது 63) இவர் சிதம்பரம் அருகே நடராஜபுரம் பகுதியில் குடோன் வைத்துள்ளார். பொங்கல் விடுமுறை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி இரவு குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று மாலை வந்து பார்த்தபோது குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 7 மோட்டார்கள் திருடு போனது தெரி யவந்தது.
இது குறித்து அண்ணா மலை நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அண்ணா மலை நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனையொட்டி புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க புதுவை மாநில எல்லையோரங்களில் உள்ள 8 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் மது விலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இதில் போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை அதாவது 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மது கடத்தல், மது விற்பனை செயலில் ஈடுபட்ட 127 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. ஆற்று திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுக்கடத்தலை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 762 ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிரிட்டு வந்தனர்.
- 250 ஏக்கரில் பன்னீர் கரும்புகள் விற்பனையாகாமல் அந்தந்த நிலத்தில் இருந்து உள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, பத்திரக்கோட்டை, சத்திரம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 762 ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிரிட்டு வந்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவசமாக பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு திடீரென்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இல்லை என அறிவித்ததால் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து தமிழக அரசு ஒரு ஜோடி கரும்பு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்து அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் குழு அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக சென்று பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள் குழு பன்னீர் கரும்பு வாங்குவதற்கு நேரடியாக சென்று அதனுடைய தரம் மற்றும் உயரம் போன்றவற்றை முழுவதும் ஆய்வு செய்து விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்தனர். இதில் பொங்கல் தொடங்குவதற்கு முன்பு சத்திரம், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாரிகள் சரியான முறையில் பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யாமல் வெட்டப்பட்ட கரும்புகள் அந்தந்த தோட்டத்தில் இருந்ததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து பன்னீர் கரும்பு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வாங்கினார்கள்.
இந்த நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக சென்று பன்னீர் கரும்பு கொள்முதல் செய்ததை தொடர்ந்து தற்போது சுமார் 250 ஏக்கரில் பன்னீர் கரும்புகள் விற்பனையாகாமல் அந்தந்த நிலத்தில் இருந்து உள்ளன. இதனை தொடர்ந்து விவசாயத்தில் பன்னீர் கரும்பு சுமார் 250 ஏக்கருக்கு மேல் விற்பனையாகாமல் இருந்ததால் மிகுந்த கவலையுடன் இருந்து வருகின்றனர். மேலும் பன்னீர் கரும்பு பயிரிட்டு அதனை ஒரு வருடம் பாதுகாத்து அதற்கு செலவு செய்து தற்போது விற்பனை ஆகாததால் ஒருபுறம் கவலை ஏற்பட்டாலும் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது என விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.
தற்போது விற்பனையாகாத கரும்புகளை மிக குறைந்த விலையில் நாளை நடைபெறும் ஆற்று திருவிழா, தைப்பூசம், மாசி மகம் உள்ளிட்ட அடுத்தடுத்து வரும் திருவிழா காலங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் வாகனங்கள் மூலம் ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக விற்பனை செய்வதால் பன்னீர் கரும்பு பயிர் செய்ததற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் அசல் தொகை கிடைத்தால் போதுமானது என்ற நிலைக்கு விவசாயிகள் மனநிலை வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது போன்ற காலங்களில் அரசு உரிய முறையில் விவசாயிகளுக்கு உதவி புரிய வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இவர் போலீஸ் ஜீப் ஓட்டிக் கொண்டு மாளிகை மேடு சென்றார். அப்போது ஜீப் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது.
- இவருக்கு தலையில் பலத்தஅடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ராயர்பா ளையதை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31) இவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் ஜீப் டிரைவராக இருந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள்உள்ளனர் இவர் நேற்று போலீஸ் ஜீப் ஓட்டிக் கொண்டு மாளிகை மேடு சென்றார். அப்போது ஜீப் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது.
இதனால் இவருக்கு தலையில் பலத்தஅடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து இவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்.இன்ஸ்பெக்டர்தங்கவேல் ஆகியோர்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று காணும் பொங்கல் விழாவினை குதூகலமாக கொண்டாடி விட்டு வீடு திரும்பினர்.
- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பேத்கார் உயிரிழந்தார்
கடலூர்:
வேப்பூர் அருகே அவ்வதகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அம்பேத்கார் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சவுந்திரபாண்டியன் (27). இருவரும் அப்பகுதியில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையில் 3-ம் நாளான காணும் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று காணும் பொங்கல் விழாவினை குதூகலமாக கொண்டாடி விட்டு வீடு திரும்பினர்.
அப்போது வேப்பூர் கூட்ரோடு சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பேத்கார் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார். இத்தகவலறிந்து விரைந்து சென்ற வேப்பூர் போலீசார் பலத்த காயமடைந்த சவுந்திரபாண்டியனை சிகிச்சைக்காக விருத்தாசலம் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அம்பேத்காரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இவர்கள் குடிபோதையில் சத்த ம்போட்டு க்கொண்டுஇருசக்கர வாகனத்தில் எஸ்.கே.பாளையம் தோப்பு வழியே சென்றனர்.
- 10 பேர் மாளிகைமேடு காலனியை சார்ந்த இருவரையும் பார்த்து அசிங்கமாக திட்டியதால் , இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,
கடலூர்:
பண்ருட்டி அருகே மாளிகை மேடு காலனியை சேர்ந்த மோகன் மகன் தனுஷ், பிரகாஷ் மகன் பிரதீப். இவர்கள் காணும்பொங்கல்தினமான நேற்று குடிபோதையில் சத்த ம்போட்டு க்கொண்டுஇருசக்கர வாகனத்தில் எஸ்.கே.பாளையம் தோப்பு வழியே சென்றனர் அப்போது தோப்பில் மதுகுடித்து கொண்டிருந்தஎஸ்.கே. பாளையம்கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், செந்தில் உள்ளிட்ட10 பேர் மாளிகைமேடு காலனியை சார்ந்த இருவரையும் பார்த்து அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இரு தரப்பினரும் தங்கள் ஊர் மற்றும் காலனி தரப்பினரை வரச்செய்து ஒருவரை ஒருவர் கல், தடியால் தாக்கி கொண்டனர். இ ந்த மோதலில் மாளிகை மேடு காலனியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (50)பிரபு (40), வசந்தா (38) நாவத்தாள் (50)வசந்த் ஆகியோர் காயமடைந்தனர் இவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.எஸ் கே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று இது குறித்து சசி, செந்தில், அருண், கவுதம்,பூவரசன் ,சுந்தரம் ,செங்குட்டுவன்,சிவகுமார்,பிரபாகரன்,ரமேஷ்,கிருஷ்ணமூர்த்தி,விஜயகுமார்,குமார் மதன் காந்தி உள்ளிட்ட20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இங்கு பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
- இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
- இருவரையும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட போது பாலமுருகன், சிவாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் கீழ்பாதியில் காணும் பொங்கலை முன்னிட்டு அக்கிராமத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிவசங்கர்,ஹரி கிருஷ்ணன், ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஆலிச்சி க்குடி கிராமத்தில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு கூடியிருந்த இளைஞர்கள் வாகனத்தில் இந்த சாலையில் செல்லக்கூடாது என வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
அவர்களிடம் வாக்கு வாதம் செய்த சிவசங்கர், ஹரி கிருஷ்ணன் இருவரும் அங்கிருந்து விருத்தாச்சலம் சென்று பரிசு பொருட்களை வாங்கி விட்டு அதே வழியில் மீண்டும் சென்றபோது, 20- க்கும் மேற்பட்ட இஇருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் தகவல் அறிந்து அங்கு வந்த சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தைச் சார்ந்த பாலமுருகன், சிவா அவர்கள் இருவரையும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட போது பாலமுருகன், சிவாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டனர இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரு தரப்பினரிடயே ஏற்பட்ட மோதலின் காரணமாக சாத்துக்கூடல் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அபிஷேகம் நடை பெறுவதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் கூறியதாக தெரிகிறது.
- ஜெயசீலா, அபிஷேகம் நடந்தாலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்
கடலூர்:
சிதம்பரம் அருேக புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலா (வயது 27). இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது திருச்சிற்றம்பலம் வாயில் மூடப்பட்டிருந்தது. இதை யடுத்து வாயிலை திறக்கச் சொல்லி ஜெயசீலா அங்கிருந்த தீட்சிதர்களிடம் கூறியுள்ளார். ஆனால், உள்ளே அபிஷேகம் நடை பெறுவதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் கூறியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயசீலா, அபிஷேகம் நடந்தாலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்த துணை சுப்பிரண்டு ரகுபதி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து ஜெயசீலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தாங்கள் நினைப்பதை எங்களுக்கு புகார் மனுவாக கொடுங்கள்.
இது குறித்து துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அனுப்பி, இப்பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம் என்று கூறினர். இதையேற்ற ஜெயசீலா அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.அதில் உள்ளதாவது:-
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் தினசரி ஒரு பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே பணி புரியும் தீட்சதர்கள் பணம் பெற்றுக் கொண்டு கனகசபையின் மேல் பொதுமக்களை ஏற்றுகிறார்கள். பணம் தராதவர்களை அவமானப்படுத்தி வெளியில் அனுப்புகிறார்கள். இது தினசரி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இந்து அறநிலைத்துறையின் சார்பில் தினசரி ஒரு அதிகாரி காலை முதல் மாலை வரை கோவிலில் பொதுமக்கள் ஏறுவதற்கு கண்காணிப்புக்கு அதி காரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். துறையின் சார்பில் அதிகாரிகள் வருவது இல்லை. கொரோனா காலத்திற்கு முன்பிருந்த நடைமுறைபடி பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக கூறி ஜெயசீலாவை அனுப்பிவைத்தனர். இதனால் நடராஜர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காரை எடுத்து பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- 17 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தை சேர்ந்த பெருமாள். இவரது மகள் வைஷ்ணவி, மருமகன் மணிவண்ணன், அவரது தம்பி மணிசங்கர் ஆகியோர் பண்ருட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். அங்கு காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காரை எடுத்து பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 17 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர். காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு காரில் இருந்த 3 பேரையும் தாக்கினர். மேலும், அவர்களிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி நகர இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தலைமறைவாகியிருந்த கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை போலீசார் பண்ருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இவர் பண்ருட்டி பாரதி நகர் ஜெயமூர்த்தி மகன் கவியரசு (38) என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மீதமுள்ளவர்களை எங்கு ஒளிந்து இருக்கின்றனர் என்பது குறித்து கவியரசுவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராமங்க ளில் இருந்து விவசாயிகள் பஸ்கள் மூலம் கடலூர் நகர்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றனர்.
- உழவர் சந்தை தற்போது நவீன வசதியுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் இயற்கை வளம் நிறைந்த பகுதி யாகும். இங்கு ஆண்டு தோறும் மற்ற மாவட்டங் களைவிட பருவகாலங்க ளில் அதிகமழை பொழிவது வழக்கம். எனவே தான் இந்த மாவட்டத் தில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளது. விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.
இதுபோன்ற விளை பொருட்களை விற்பனை செய்வ தற்காக கிராமங்க ளில் இருந்து விவசாயிகள் பஸ்கள் மூலம் கடலூர் நகர்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றனர். விவ சாயிகள் நலன் கருதி கடலூர் திருப்பாதிரி புலியூர் பகுதியில் உழவர்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு இரவு நேரத்திலேயே விவசாயிகள் தங்களது விளை பொருட்க ளை கொண்டுவந்து விற்பனை செய்வதுண்டு.
இதனிடையே மழை காலங்களில் உழவர்சந்தை யில் தண்ணீர் அதிகம் தேங்கியது. இதனை கருத்தில் கொண்டு உழவர் சந்தை தற்போது நவீன வசதியுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. தனித்தனியாக வியாபாரம் செய்யும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த சந்தையில் பணிகள் முடிந்து கடந்த 12-ந் தேதி திறக்கப் பட்டது.
வழக்கமாக இந்த உழவர் சந்தையில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணிவரை செயல்பட்டு வந்தது. தற்போது விவசாயி கள் நலன்கருதி இரவு 8 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது விவசாயி களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் திருநாள்முதல் விவசாயிகள் இரவு 8 மணி வரை வியாபாரம் செய்கின்றனர். கடலூர் நகர் பகுதியை சேர்ந்த மக்களும், அலுவலகத்துக்கு செல்வோரும் இரவு 8 மணிக்கு முன்னதாகவே தங்களுக்கு தேவையான காய்கறி களை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் தீவிர ரோந்துபணியில்ஈடுபட்டனர்.
- தனலட்சுமி தனது வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களை விற்றார்.
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் தீவிர ரோந்துபணியில்ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி காந்திநகர் மண்ணாங்கட்டி மனைவி தனலட்சுமி (வயது 39) என்பவர் தனது வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களை விற்றார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்துஎரிசாராய பாக்கெட்களைபறிமுதல் செய்துபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






