போலீஸ் ஜீப் கவிழ்ந்து டிரைவர் சாவு

இவர் போலீஸ் ஜீப் ஓட்டிக் கொண்டு மாளிகை மேடு சென்றார். அப்போது ஜீப் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது. இவருக்கு தலையில் பலத்தஅடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
பலியான  போலீஸ் ஜீப் டிரைவர்  சதீஷ்குமார்.
பலியான போலீஸ் ஜீப் டிரைவர் சதீஷ்குமார்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ராயர்பா ளையதை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31) இவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் ஜீப் டிரைவராக இருந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள்உள்ளனர்  இவர் நேற்று போலீஸ் ஜீப் ஓட்டிக் கொண்டு மாளிகை மேடு சென்றார். அப்போது ஜீப் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது.

இதனால் இவருக்கு தலையில் பலத்தஅடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து இவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்.இன்ஸ்பெக்டர்தங்கவேல் ஆகியோர்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com