மின் நிலையத்தில் அலுமினிய ஒயர் திருடிய ஒருவர் கைது

250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது.முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர்.
மின் நிலையத்தில் அலுமினிய ஒயர் திருடிய ஒருவர் கைது
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தோப்பிருப்பு துணை மின் நிலையத்தில் கடந்த 7-ந் தேதி 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது. காணாமல் போன அலுமினிய காயில் ஒயரை மின்துறை ஊழியர்கள் தேடிவந்தனர். அப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக தோப்பிருப்பு துணை மின் நிலைய இளநிலை மின் பொறியாளர் ரவி (வயது 56) பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக போலலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் குட்டியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் முருகன் அளித்த தகவலின்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com