என் மலர்tooltip icon

    கடலூர்

      கடலூர்:

      விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரிக்கரையில் 40 ஆண்டுகாலமாக குடியிருக்கும் வீடுகளை அகற்ற வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி காலக்கெடு வைத்தனர். அதன்படி இதற்கான காலக்கெடு இன்று முடிந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர். விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சுமார் 40 வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலை மற்றும் ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறி வருவாய்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர்

      தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரி கரையில் அமைந்துள்ள 40 வீடுகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை இருப்பதால், தங்களுக்கு மாற்று இடம் அளிக்குமாறு பலமுறை விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாற்றிடம் ஏதும் அரசால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமிப்பு களை இன்று அகற்ற வருவாய் துறை சார்பில் தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

      • தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
      • டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரியவந்தது,

      கடலூா:

      பண்ருட்டி அருகே தோ ப்புக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் ஆஷா (எ) சுபா (வயது 23).   இவர்அ தேபகுதியிலுள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில்தேடினர்.எங்கும் கிடைக்கவில்லை

      . அதே பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சின்னையன் முத்தாண்டி க்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

      • 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
      • போலீசார் அவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

      கடலூர்:

      பண்ருட்டியை அடுத்த கண்டரகோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுதிருவிழா நேற்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதி களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் தீர்த்தவாரிக்காக வந்து சென்றன. ஆயிரக்க ணக்கான கடைகள் அமைக்கப் பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையிலும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத விதத்திலும் பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், சீனிவாசன், பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

      இந்த திருவிழா கூட்ட நெரிசலில் 5, 6 வயதிற்குட்ட 17 இளம் சிறுவர், சிறுமிகள் மாயமானார்கள். இதுபற்றி அங்கிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டு அவர்களது புகைப்படங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டி ருந்த போலீசாருக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்து, அங்கிருந்த ஒலி பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டு சில மணி நேரத்திற்குள் போலீசார் அவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். போலீ சாரின் மனிதநேயமிக்க சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

      • கடலூர் வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
      • கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

      கடலூர்:

      ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

      அதன்படி இன்று காலை கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. மாநில மேலிட பார்வையாளர் ரவி தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

      கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, பொருளாதார பிரிவு மாநில தலைவரும், அன்னை பாத்திமா கல்வி நிறுவனங்களின் குழும தலைவருமான எம்.எஸ்.ஷா, இசை அமைப்பாளர் கங்கையமரன் மற்றும் மாநில பார்வையாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

      மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி கடலூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக கடலூர் வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

      • புகார் மனுவில் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்றதால் மர்மநபர்கள் என்னை கொல்ல முயற்சித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
      • போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

      வானூர்:

      விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகர தி.மு.க. துணை செயலாளர் பக்ருதீன் (வயது 42). இவரது சகோதரி நபிஷா கோட்டக்குப்பம் நகராட்சி 27-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

      இந்த வார்டு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகம் நடைபெறுகிறது. எனவே இதனை கண்காணிக்க அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைத்துள்ளார். இந்த கேமராக்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இது தொடர்பாக பக்ருதீன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      இந்த நிலையில் பக்ருதீன் சொந்த வேலை விஷயமாக திருச்சி சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று இரவு கோட்டக்குப்பம் பஸ்நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

      அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பக்ருதீனை சுற்றிவளைத்து கத்தியால் வெட்டியது. இதில் அவர் கூச்சலிட்டவாறு ஓடினார். சத்தம்கேட்டு அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்தி வெட்டில் படுகாயம் அடைந்த பக்ருதீன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்றதால் மர்மநபர்கள் என்னை கொல்ல முயற்சித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

      அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

      • பா.ஜ.க. போட்டியிட்டால் கட்சி வளர்ச்சி பெறும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
      • பரபரப்பான சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று காலை தொடங்கி மாலை வரை நடக்கிறது.

      கடலூர்:

      ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா. திருமகன் மாரடைப்பால் காலமானார். இதனை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

      இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். இதற்கு தி.மு.க.வும் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

      கடந்தமுறை நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே த.மா.கா. போட்டியிடுவது குறித்து அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்களிடையே த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.

      இதையடுத்து அ.தி.மு.க. விருப்பத்தை த.மா.கா. ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக இன்று அறிவித்துள்ளார்.

      இதற்கிடையே இந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள். ஏற்கனவே இந்த மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ஜ.க.வை சேர்ந்தவர் உள்ளார். எனவே பா.ஜ.க. போட்டியிட்டால் கட்சி வளர்ச்சி பெறும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

      எனவே இந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று காலை தொடங்கி மாலை வரை நடக்கிறது.

      இந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

      அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கட்சி வளர்ச்சி குறித்தும், ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பா.ஜ.க. ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்பது தெரியவரும்.

      • ராஜபாண்டி- சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
      • பால்குடித்து தூங்கிய குழந்தைக்கு திடீரென மூச்சுத்தினறல் எடுத்தது,

      கடலூர்:

      பண்ருட்டி அருகே வல்லம் கிராம த்தைச் சேர்ந்தவர் ராஜ பாண்டியன். இவரது மனைவி சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று வழக்கம்போல் குழந்தைக்கு சுபாஷினி பால் கொடுத்துவிட்டு அருகில் தூங்க வைத்திருந்தார். அப்போது குழந்தைக்கு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டது.

      உடனே அந்த குழந்ைதயை நெய்வேலி மத்திய பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தன இது குறித்து முத்தா ண்டிகுப்பம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.

      • ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
      • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று திருவிழா இன்று நடைபெற்று வருவதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

      கடலூர்:

      பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. மஞ்சக்குப்பம் நேதா ஜிசாலை பகுதியில் பக்தர்கள் சாலையோரங்களில் நின்று சாமிகளை வழிபட்டனர். சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

      கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடி சாமி கும்பிட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று திருவிழா இன்று நடைபெற்று வருவதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர். ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      • டீ குடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.
      • தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.

      கடலூர்: 

      கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள விருத்தாசலம் சாலை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவர் இன்று அதிகாலை டீகுடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக ந்த சுற்றுலா பஸ் பெரியசாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

      • மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு உள்ளார்.
      • சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

      கடலூர்:

      சிதம்பரம் அடுத்த வடக்கு பிச்சாவரம் அரண்மனை தெருவை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் மனைவி சுமதி (வயது 50). கடந்த 13-ம் தேதி சித்தலாபாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து கொடிப்பள்ளம் செல்ல அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு உள்ளார். அப்போது பின்னால் அமர்ந்து சென்ற சுமதி நற்கந்தங்குடி வாட்டர் டேங்க் அருகே தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது கணவர் அளித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

      • வீட்டு வேலைகளை செய்யுமாறு தாய் சொல்லியும் வேலை செய்யாமல் சுமித்ராவை அவரது தாய்கண்டித்துள்ளார்,
      • வேதனை அடைந்த மாணவி வீட்டில் இருந்த பல்வேறு வகையான 26 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார், பின்பு பள்ளிக்கு சென்ற போது திடீரென மயங்கிவிழுந்தார்.

      பண்ருட்டி:

      கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏ.கே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா( வயது 18) இவர் பண்ருட்டியில் உள்ளஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்  நேற்று  வீட்டில் இருந்த போது வீட்டு வேலைகளை செய்யுமாறு தாய் கூறியுள்ார், ஆனால் வேலை செய்யாமல் சுமித்ரா இருநதார். இதனை அவரது தாய்கண்டித்துள்ளார்,

      இதனால், வேதனை அடைந்த மாணவி வீட்டில் இருந்த பல்வேறு வகையான 26 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார், பின்னர் வழக்கம்போல், பள்ளி சென்றுள்ளார்  சிறிது நேரத்தில் திடீரென சுமித்ரா மயங்கி விழுந்தார், இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனே வகுப்பு ஆசிரியர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்   இதையடுத்து மாணவியை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தாய் திட்டியதால், மாணவி மாத்திரைகளை தின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது.
      • ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

      காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வெ.ரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

      தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.

      இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சி தலைவர்களும் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

      ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

      இது தொடர்பான பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நாளை கடலூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். கூட்ட முடிவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

      இந்நிலையில் மாலை மையக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

      ×