தாய் கண்டித்ததால் விபரீதம்: மாத்திரைகளை சாப்பிட்டு பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி

வீட்டு வேலைகளை செய்யுமாறு தாய் சொல்லியும் வேலை செய்யாமல் சுமித்ராவை அவரது தாய்கண்டித்துள்ளார், வேதனை அடைந்த மாணவி வீட்டில் இருந்த பல்வேறு வகையான 26 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார், பின்பு பள்ளிக்கு சென்ற போது திடீரென மயங்கிவிழுந்தார்.
தாய் கண்டித்ததால் விபரீதம்: மாத்திரைகளை சாப்பிட்டு பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏ.கே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா( வயது 18) இவர் பண்ருட்டியில் உள்ளஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்  நேற்று  வீட்டில் இருந்த போது வீட்டு வேலைகளை செய்யுமாறு தாய் கூறியுள்ார், ஆனால் வேலை செய்யாமல் சுமித்ரா இருநதார். இதனை அவரது தாய்கண்டித்துள்ளார்,

இதனால், வேதனை அடைந்த மாணவி வீட்டில் இருந்த பல்வேறு வகையான 26 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார், பின்னர் வழக்கம்போல், பள்ளி சென்றுள்ளார்  சிறிது நேரத்தில் திடீரென சுமித்ரா மயங்கி விழுந்தார், இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனே வகுப்பு ஆசிரியர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்   இதையடுத்து மாணவியை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தாய் திட்டியதால், மாணவி மாத்திரைகளை தின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com