search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரவு  நேரத்திலும் செயல்படும் கடலூர் உழவர் சந்தை
    X

    இரவு நேரத்திலும் செயல்படும் கடலூர் உழவர் சந்தை

    • கிராமங்க ளில் இருந்து விவசாயிகள் பஸ்கள் மூலம் கடலூர் நகர்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றனர்.
    • உழவர் சந்தை தற்போது நவீன வசதியுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் இயற்கை வளம் நிறைந்த பகுதி யாகும். இங்கு ஆண்டு தோறும் மற்ற மாவட்டங் களைவிட பருவகாலங்க ளில் அதிகமழை பொழிவது வழக்கம். எனவே தான் இந்த மாவட்டத் தில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளது. விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    இதுபோன்ற விளை பொருட்களை விற்பனை செய்வ தற்காக கிராமங்க ளில் இருந்து விவசாயிகள் பஸ்கள் மூலம் கடலூர் நகர்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றனர். விவ சாயிகள் நலன் கருதி கடலூர் திருப்பாதிரி புலியூர் பகுதியில் உழவர்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு இரவு நேரத்திலேயே விவசாயிகள் தங்களது விளை பொருட்க ளை கொண்டுவந்து விற்பனை செய்வதுண்டு.

    இதனிடையே மழை காலங்களில் உழவர்சந்தை யில் தண்ணீர் அதிகம் தேங்கியது. இதனை கருத்தில் கொண்டு உழவர் சந்தை தற்போது நவீன வசதியுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. தனித்தனியாக வியாபாரம் செய்யும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த சந்தையில் பணிகள் முடிந்து கடந்த 12-ந் தேதி திறக்கப் பட்டது.

    வழக்கமாக இந்த உழவர் சந்தையில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணிவரை செயல்பட்டு வந்தது. தற்போது விவசாயி கள் நலன்கருதி இரவு 8 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது விவசாயி களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் திருநாள்முதல் விவசாயிகள் இரவு 8 மணி வரை வியாபாரம் செய்கின்றனர். கடலூர் நகர் பகுதியை சேர்ந்த மக்களும், அலுவலகத்துக்கு செல்வோரும் இரவு 8 மணிக்கு முன்னதாகவே தங்களுக்கு தேவையான காய்கறி களை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    Next Story
    ×