என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த விவசாயியை படத்தில் காணலாம்.
பண்ருட்டியில் சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த விவசாயிகொலையா? போலீஸ் விசாரணை
- இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுபற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (வயது 50) என தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சரகம் திராசுபாளையம் கிராமத்தில் விழுப்புரம்- கடலூர் சாலைஓரம் இன்று காலை விவசாயி ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுபற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தொடர்ந்து நடந்த விசாரணையில் பிணமாக கிடந்தவர் தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (வயது 50) என தெரிய வந்தது. இவரை மர்மநபர்கள் அடித்து கொன்று வீசி சென்றார்களா? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






