search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veppur Market"

    • கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.
    • ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் முதல் 35 ரூபாய் வரை விற்பனையானது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய நெசலூர், கொளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, வரம்பனூர், கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகள் விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்து வருவர்.

    இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் காணும் பொங்கலன்று கறி சமைத்து உண்ணும் பழக்கம் நமது கிராமங்களில் உள்ளது. அதன் காரணமாக இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க புதுச்சேரி, திருச்சி, சென்னை தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வேப்பூர் சந்தையில் குவிந்தனர்.

    அதன்படி கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது. ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் முதல் 35 ரூபாய் வரை விற்பனையானது. வழக்கத்தை விட 3 ஆயிரம் ரூபாய் வரையில் ஆட்டின் விலை இந்த வாரம் உயர்ந்திருந்தது. பொங்கல் பண்டிகை என்பதால் இன்று காலை 5 மணி முதல் 9 வரை ஆட்டு சந்தையில் காலை 8 மணி நிலவரப்படி 4 மணி நேரத்துக்குள் 3500 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 3 கோடியாகும்.

    1500 க்கும் மேற்பட்ட ஆடு வளர்ப்போரிடம் இருந்து 200க்கும் மேற்பட்டோர் வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையிலும் ஆடுகளை வாங்கிச் சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×