வடலூரில் பள்ளி தாளாளரை மிரட்டியவர் கைது: 2 பேர் தலைமறைவு

சந்தேகம் அடைந்த தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர்களிடம் இத்தகவலை கூறினார்.போலீசார் கனகசபையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வடலூரில் பள்ளி தாளாளரை மிரட்டியவர் கைது: 2 பேர் தலைமறைவு
Published on

கடலூர்:

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக செல்வராஜ் பணியாற்றி வருகிறார். விருந்தாசலம் கொட்டாரம் குருநாதன் மகன் கனகசபை (வயது 45) என்பவர் தன்னை வார பத்திரிகையின் மாவட்ட நிருபர் என்றும், மணி என்பவர் மனித உரிமை அமைப்பின் செயலாளர் எனவும், பூண்டியாங்குப்பம் நல்லி மகன் ராமலிங்கம் மாவட்ட விவசாய சங்கத்தவைவர் எனவும் கூறிக்கொண்டு செல்வராஜிடம் சென்று பள்ளியில் உள்ள சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.

சந்தேகம் அடைந்த தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர்களிடம் இத்தகவலை கூறினார்.இது குறித்து ஊழியர்கள் அவர்களிடம் விசாரித்த போது கார்த்திகேயன் என்பவரை 3 பேரும் கையால் அடித்து தாக்கியுள்ளனர். இது குறித்து வடலூர் போலிசில் பள்ளி நிர்வாகத்தால் புகார் அளிக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கனகசபையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள ராமலிங்கம், மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com