என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flyover to set up"

    • கிராம மக்கள் வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்
    • கிராம மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி, காவனூர் இடையே வெள்ளாறு அமைந்துள்ளது, இந்த ஆற்றின் கரையோரம் கள்ளிபாடி காவனூர், மருங்கூர், கீரனூர், வல்லியம், சக்கரமங்களம், கார்மாங்குடி, மேலப்பாளையூர், தொழூர், கொடுமனூர், கீழப்பாளையூர், தேவங்குடி, பவழங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா அலுவலகம், மருத்துவமனை பள்ளி, கல்லூரி என பல்வேறு விவசாய பணிகளுக்கு பொதுமக்கள் இந்த ஆற்றை கடந்து தான் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு செல்ல வேண்டும்

    கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காவனூர், கள்ளிப்பாடி இடையே மேம்பாலம் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும், என கிராம மக்கள் வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர். கடந்த 7 ஆண்டிற்கு முன் காவனூர், கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்க இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இதனால் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    தற்போதைய சட்ட சபையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறி, காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராசாபிள்ளை, மருங்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாபு, கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோர் தலைமையில், வீதிகளிலும் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டியதோடு வெள்ளாாற்றுக்கு நடுவே நின்று கருப்பு கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    அரசு அறிவித்தபடி வெள்ளாற்றில் பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி, சட்ட சபையில் அறிவித்து விரைந்து பாலம் அமைக்க உரிய நடவடிகை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்

    ×