search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் திருவிழா
    X

    கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் திருவிழா

    • பம்பை, உடுக்கை, சிலம்பம், கும்மி, தப்பாட்டம், வாய்ப்பாட்டு, வயலின் இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடினார்கள்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருநாள் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் மங்கள இசை உடன் விளக்கேற்றி பொங்கல் வைத்து இயற்கை வழிபாடு செய்து கொண்டாடப்பட்டது. பின்னர் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    மேலும் பம்பை, உடுக்கை, சிலம்பம், கும்மி, தப்பாட்டம், வாய்ப்பாட்டு, வயலின் இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடினார்கள்.

    மேலும் அனைவரும் வண்ண ஆடைகளுடன் பாரம்பரிய உடைகள் அணிந்து மாணவ-மாணவிகள் விழாவில் கலந்து கொண்டது கல்லூரி முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் விழா ஒருங்கிணைப்பை தமிழ் துறையினர் மற்றும் நெய்தல் தமிழ் மன்றம் செய்திருந்தனர். முடிவில் தமிழ் துறை தலைவர் கீதா நன்றி கூறினார்.

    Next Story
    ×