திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் பிரசாத்துக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அக்கம் உள்ள்வர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட  புதுமாப்பிள்ளை விஷம்  குடித்து தற்கொலை
Published on

கடலூர்: 

கடலூர் அருகே சமிட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகன் ராம்பிரசாத் (வயது 25) விவசாயி இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் பிரசாத்துக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் ராம் பிரசாத்துக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று ராம்பிரசாத் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் உள்ள்வர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராம் பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com