பண்ருட்டி அருகே வீட்டில் மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

விருத்தாசலம் வட்டம், ஆலடி புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது முதல் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம்.
பண்ருட்டி அருகே வீட்டில் மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே வீட்டில் மயங்கி விழுந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், பண் ருட்டி வட்டம், ரெட்டிப்பாளை யம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ராஜாராமன் (வயது 35). விருத்தாசலம் வட்டம், ஆலடி புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமன் பைக் விபத்தில் சிக்கினாராம்.

அப்போது முதல் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி ராஜாராமன் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com