என் மலர்tooltip icon

    கடலூர்

    • மாணவி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த மாணவி பிளஸ்ப-1 படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி மாணவிக்கும், வாலிபருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசி பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்பட்டது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் புதுவைைய சேர்ந்த குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தட்சிணாமூர்த்தி 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பெரிய நெல்லிக்காய் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 63). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் போக்சோ சட்ட த்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தி கைது செய்தனர்.

    • மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான் பவன் சாலையில் நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் , மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் , வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தி பேரணி கடலூர் அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் வந்து முடிவடைந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் ஊர்வலத்தில் நடந்து வந்தனர். மேலும் பேரணி முழுவதும் தண்ணீர் அவசியத்தை குறித்தும், மரம் நடுவோம் மழை நீர் பெறுவோம், மழை நீர் உயிர் நீர், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் வாகனங்களில் தெரிவித்து வந்தனர். அப்போது நகர் நல அலுவலர் (பொறுப்பு)ஜாபர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சரஸ்வதி வேலுசாமி, ஆராமுது, சரிதா, செந்தில் குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்க தகவல் வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டுசின்னப்பராஜ் மகன்ரீனா ஸ்டீபன் ராஜ் (19),பணிக்கன் குப்பம்முருகன் கோவில் தெரு, நாகப்பன் மகன்ராஜ்குமார்(19) ஆகியோர் 50 கிராம் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக தகவல் வந்ததின்பேரில் பண்ருட்டி உட்கோட்ட கிரைம் போலீசார் இவர்களைகாடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்துஇவர்கள் இருவரையும்காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன்,சப்.இன்ஸ்பெக்டர்பிரேம்குமார் கைது செய்துஅவர்களிடம் இருந்துமுதல்செய்துபண்ருட்டிகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மங்கலம்பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கர்னத்தம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது.38), ஆசாரி. இவருக்கு கலை வாணி என்கிற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில், வெல்டிங் வேலை செய்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கு குடிப் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத் தன்று, கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். பின்னர், அன்று மாலை, வீட்டில் தூக்கில் தொங்கி னார்.

    இதனைக் கண்ட அவரது மனைவி கலைவாணி, தாய் அலமேலு உள்ளிட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு கொண்டு சென்ற னர். அங்கு, அவரை பரி சோதனை செய்த டாக்டர், கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீஸ் உதவி ஆய்வாளர் தேவி, கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி, விருத்தா சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து, கிருஷ்ண மூர்த்தி மனைவி கலை வாணி மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    • மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
    • சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான சிறை காவலர்கள் மத்திய சிறை வளாகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிச் சிறை எண் 1 பகுதி வளாக கழிவறை முன்பு உள்ள செடி அருகில் மண்ணை தோண்டி பார்த்ததற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறை காவலர்கள் மண்ணை தோண்டி பார்த்தபோது, அங்கு 1 செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயிலர் மணிகண்டனுக்கும், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சிறைசாலையில் பணிபுரிந்து வந்த வார்டன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் ஜெயிலர் கடந்த ஆண்டு மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தூண்டுகோலாக பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

    • பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் மெக்கானிக்காக பணி செய்து வந்தார்.
    • நான் கடலூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி சென்று விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இங்கு பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் (31) மெக்கானிக்காக பணி செய்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெளியில் சென்று பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 22-ந்தேதி விழுப்புரம் மார்க்கெட்டு பின்புறம் அழைத்து சென்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டினார்.

    அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பண்ருட்டி எல்.என். புரம் மின்வாரிய அலுவலகம் அருகில் இறக்கி விட்டு விட்டு உன்னுடன் வாழ எனக்கு விருப்பமில்லை நான் கடலூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி சென்று விட்டார் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ருட்டி மகளிர் போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

    • பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.
    • இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர்,மகேஸ்வரி ஆகியோரிடம் ஈகார் கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி சார்பாக இன்று காலை முதல் தெருகளில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிருடன் பிடித்து அருகிலிருந்த வனத்துறைக்கு சொந்தமான சமூக காட்டில் விட்டனர் இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர்.
    • டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றி க்கொண்டு செல்வதற்கு எதுவாக தனியார் பள்ளிகள் சார்பில் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 93 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 297 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளி வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு உள்ளதா? என்று ஆய்வு செய்வதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்ச க்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பிரான்சிஸ், விஜய் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறுகையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவ லகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 93 தனியார் பள்ளிகள், 297 வாகனங்களை மாணவர்களை பள்ளி களுக்கு ஏற்றி வருவதற்காக பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? முதலுதவி அளிக்கும் மருந்து பெட்டகம் உள்ளதா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். இதில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல எவ்வித தகுதியும் இல்லாத வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். பின்னர் அந்த பஸ் டிரைவர்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம் என தெரிவித்தார். முன்னதாக அனைத்து வாகன டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    • விருத்தாசலம் அருகே ெரயிலில் இருந்து விழுந்து அடையாளம் தெரியாத நபர் பலியானார்.
    • இறந்த கிடந்த நபரின் சட்டைப் பையில் 22-ந்தேதியிட்ட ரெயில் டிக்கெட் இருந்தது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் இருந்து சென்னை செல்லும் ெரயில்வே இருப்பு பாதை அருகே ஆண் பிணம் கிடந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் விருத்தாசலம் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த கிடந்த நபரின் சட்டைப் பையில் 22-ந்தேதியிட்ட ரெயில் டிக்கெட் இருந்தது. இதில் இவர் பெண்ணாடத்தில் இருந்த தாம்பரம் செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். ரெயிலில் பயணம் செய்த அந்த நபர் தவறி விழுந்து இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் கொண்ட குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தனர்.
    • ஆனால் தனி உறுப்பு தொடப்பட்டு பரிசோதனை நடைபெற்றது உண்மை.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீதுள்ள வெறுப்பால் குழந்தை திரும ணங்கள் நடைபெறுவதாக பொய் வழக்குகள் போட ப்பட்டு ள்ளன. குழந்தைகளுக்கு கன்னி தன்மை பரிசோதனை யான தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக கவர்னர்ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி சிறுமியிடம் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதா என்பது குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் லட்சுமி வீரராகவன் மற்றும் உறுப்பி னர்கள் இளங்கோவன், பெனிட்டா, முகுந்தன், செந்தில் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தனர். நடாரஜர் கோவில் தீட்சிதர்கள் சிறுமிகளிடம் கன்னி தன்மை பரிசோதனை க்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்த புது டெல்லி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் சிதம்பரத்திற்கு வருகை தந்தார். பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதிக்கு வருகை தந்த அவரை கடலூர் மாவட்டகலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, உதவி கலெக்டர் சுவேதாசுமன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் ஆணைய உறுப்பினர் ஆனந்த் நடராஜர் கோவிலுக்கு சென்று ஆதிமூலநாதர் சந்நிதி அருகே அறுபத்து மூவர் சந்நிதியில் அமர்ந்து பாதிக்கப்பட்ட தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன் மற்றும் இருவிரல் பரிசோ தனை செய்யப்பட்ட தாக கூறப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர், பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் உள்ளிட்டோ ரிடம் உறுப்பினர் ஆனந்த் விசாரணை மேற்கொ ண்டார். பின்னர் பரிசோ தனை செய்யப்ப ட்டதாக கூறப்படும் சிறுமிகளின் வீடுகளுக்கு சென்று சிறுமிகளிடமும், அவர்களது பெற்றோரிடமும் தனியாக விசாரணை மேற்கொண்டு பதிவு செய்தார். அப்போது கோவில் வக்கீல் சந்திரசேகரன் உடனிருந்தார். பின்னர் அவர் நிருப ர்களிடம் கூறியதாவது:-

    தற்போது 3கட்ட விசாரணை நடத்தினேன். முதல் கட்டமாக பாதிக்க ப்பட்ட தீட்சிதர்களிடமும், இரண்டாவதாக காவ ல்துறை அதிகாரிகளிடமும்,, மூன்றாவது பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த கோர்வையான விசாரணை அறிக்கையை ஆணைய தலைவரிடம் அளிக்க உள்ளேன். அந்த அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிக்கை 2 அல்லது 3 நாட்களுக்குள் தயார் செய்து அனுப்பி வைக்கப்படும். தீட்சிதர்கள், சிறுமியிடம் விசாரணை செய்த போது குழந்தை திரு மணம் நடைபெறவில்லை. எங்களை வற்புறித்தியதால் திருமணம் நடைபெற்றதாக ஒப்புக்கொ ண்டோம் என கூறினர். குழந்தைகள் எந்தவிதத்தில் பாதிக்க ப்பட்டாலும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். நாமக்கல் மாவட்ட சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். இருவிரல் பரிசோதனை நடைபெற்ற தற்கான ஆதாரம் இல்லை. ஆனால் தனி உறுப்பு தொடப்பட்டு பரிசோதனை நடைபெற்றது உண்மை. இருவிரல் பரிசோ தனை நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

    • இதுவரை 22,032 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
    • பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 65 நபர்களுக்கு ரூ. 6.9 இலட்சம் மதிப்பீட்டில் பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின் பேரில் கடலூர் மாவட்டத்தில் 32 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 35 மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் மற்றும் 1 சிறுபான்மையினர் நல விடுதி என ஆககூடுதல் 68 விடுதிகள் இயங்கி வருகின்றது. இவற்றில் 3044 மாணவர்கள் மற்றும் 1681 மாணவியர்கள் என ஆக மொத்தம் 4725 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அவ்வகையில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் வாயிலாக சிறுபான்மை யினர் கல்வி உதவித்தொ கைத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 -ம் ஆண்டில் 12146 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் உதவித் தொகைகள் வழங்கப்ப ட்டுள்ளன. மேலும், 2022-23 -ம் ஆண்டிற்கு 5655 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 27,113 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 11.24 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டத்தின் கீழ் மிகப்பிற்டுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இதுவரை 22,032 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்ப ட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 13,095 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.41 கோடி மதிப்பீட்டில் மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த வர்களுக்கு 43 ேபர்களுக்கு ரூ. 2,39,940 மதிப்பீட்டில் விலையில்லா தையல் எந்திரங்கள் மற்றும் 56 ேபர்களுக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    பொருளாதார கடனுதவித் திட்டங்கள் வாயிலாக, தமிழ்நாடு சிறுபா ன்மையினர் பொரு ளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்தவ ர்களுக்கு 977 ேபர்களுக்கு ரூ. 4.25 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பிற்படுத்தப்ப ட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவ ர்களுக்கு 1775 நபர்களுக்கு ரூ. 11.43 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 65 நபர்களுக்கு ரூ. 6.9 இலட்சம் மதிப்பீட்டில் பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மாவ ட்ட த்தில் பொரு ளாதாரத்தில் பின்தங்கி யுள்ள முஸ்லிம் பிரிவைச் சார்ந்த மகளிர்களுக்கு 322 ேபர்களுக்கு ரூ. 43.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×