கடலூர் அருகே பள்ளி மாணவி கடத்தல்

மாணவி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் அருகே பள்ளி மாணவி கடத்தல்
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த மாணவி பிளஸ்ப-1 படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி மாணவிக்கும், வாலிபருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசி பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்பட்டது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் புதுவைைய சேர்ந்த குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com