விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்த ஐ.டி.நிறுவன ஊழியர்: மனைவி போலீசில் புகார்

கணவன் சிவராமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்குநிலையில் உள்ளது. சிவராமன் உட்பட 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விவாகரத்து பெறாமல்  2-வது திருமணம் செய்த ஐ.டி.நிறுவன ஊழியர்: மனைவி போலீசில் புகார்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அடுத்த ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்த வர் சிவராமன். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழி யராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (31). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். இவர் களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவன் சிவராமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்குநிலையில் உள்ளது.

இந்நிலையில் சிவராமன் தனது உறவினர் பெண்ணான சிறு தொண்ட மா தேவியைசேர்ந்த சூர்யா வை (30 )கடந்த சில நாட்க ளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்து கொண்ட கணவர் சிவராமன் (35), அவரது தந்தை மூர்த்தி ராமன், தாயார் மகாலட்சுமி (55), அண்ணன் தணிகைவேல் (40),உள்ளிட்ட 8 பேர் மீது பண்ருட்டி மகளிர்போலீஸ் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, பிரியதர்ஷினியின் கணவன் சிவராமன் உட்பட 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com